ரியல் ஹீரோவாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்... நாடு படக்குழுவுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிய வீடியோ இதோ

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கி உள்ள நாடு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

BiggBoss fame Tharshan and Naadu movie team help for people affected in chennai flood gan

சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி இருக்கும் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மறுபுறம் வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் சிக்கி இருக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

சினிமா பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்களும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். சென்னையில் வெள்ளம் வந்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் தாம்பரம் மற்றும் முடிச்சூர் ஏரியாக்களும் ஒன்று. இங்கு வெள்ள நீர் வடிய ஒரு வாரத்திற்கு மேல் ஆகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BiggBoss fame Tharshan and Naadu movie team help for people affected in chennai flood gan

இப்பகுதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நாடு படக்குழுவினர் படகில் சென்று வழங்கி உள்ளனர். அதுவும் அப்படத்தின் இயக்குனர் சரவணன், ஹீரோ தர்ஷன் மற்றும் படக்குழுவினரோடு சென்று வீடு வீடாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இந்த உதவிகளை களத்தில் இறங்கி செய்ததன் மூலம் ரியல் லைஃபிலும் ஹீரோவாக மாறி இருக்கும் தர்ஷன் மற்றும் நாடு படக்குழுவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நாடு திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... புயலே வந்தாலும் குறையாத புதுபட ரிலீஸ்... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios