MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சென்னை வெள்ளம்: களத்தில் இறங்கிய விஜய்; கப்சிப்னு ஆன அஜித்..! AKவின் செயலால் கடுப்பாகி பிரபலம் தந்த நச் பதிலடி

சென்னை வெள்ளம்: களத்தில் இறங்கிய விஜய்; கப்சிப்னு ஆன அஜித்..! AKவின் செயலால் கடுப்பாகி பிரபலம் தந்த நச் பதிலடி

நடிகர் அஜித் வெள்ள பாதிப்பில் சிக்கிய நடிகர்களுக்கு உதவிவிட்டு அவரின் ரசிகர்களை கண்டுகொள்ளாததை பிரபல நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Dec 07 2023, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vishnu vishal and Aamir Khan rescued

vishnu vishal and Aamir Khan rescued

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் ஆகியும் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடி வருகின்றனர். அரசு ஒரு புறம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் தன்னார்வலர்களும், திரைப்பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

24
Ajith with aamir khan and vishnu vishal

Ajith with aamir khan and vishnu vishal

அதன்படி நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண பணிக்காக கொடுத்து தங்களுடைய ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி வருகின்றனர். அதேபோல் நடிகர் பார்த்திபன், விஜய் டிவி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, பாலா ஆகியோர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்துள்ளனர். நடிகர் விஜய்யும் தன்னுடைய ரசிகர்களை களத்தில் இறங்கி களப்பணி ஆற்ற உத்தரவிட்டு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
bose venkat

bose venkat

இப்படி பல்வேறு பிரபலங்கள் உதவி வரும் நிலையில், எப்போது மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித், நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமீர் கான் ஆகியோர் மீட்கப்பட்டதும் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. அஜித்தின் இந்த செயலை அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும் இது கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

44
bose venkat X post

bose venkat X post

பிரபலங்களுக்கு ஓடோடி சென்று உதவிய அஜித், அவரை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சாடி வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் இந்த செயலை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள்  நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என அவர் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... இப்பகூட பிசினஸுக்கு தான் முக்கியத்துவமா? வெள்ள நிவாரண உதவி வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved