மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
IPL: Hardik Pandya Hugs MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.3 மணிக்கு தொடங்கும் போட்டியில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் மோதுவதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தோனியை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஹர்திக் பாண்ட்யா மிகவும் மகிழ்ச்சியுடன் தோனியை கட்டிப்பிடிக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி எக்ஸ் பக்கதில் வெளியிட்டுள்ளது.
வைரலாக பரவும் வீடியோ
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தான் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு வந்தார். பாண்ட்யாவின் வளர்ச்சியில் தோனி பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ருந்த்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும் களமிறங்குகின்றன.
சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் மோதல்
கடந்த சீசனில் கடைசி ஆட்டத்தில் மும்பை வீரர்கள் தாமதமாக பந்துவீசியதால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே மொத்தம் 39 போட்டிகளில் நடந்துள்ள நிலையில், MI அணி 21 முறை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் CSK 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
வீல் சேரில் இருந்தாலும் சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன்! 'தல' தோனி பேட்டி! ரசிகர்கள் குஷி!
அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை
மும்பை அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், டிரெண்ட் போல்ட், திலக் வர்மா என தரமான வீரர்கள் உள்ளனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, டெவான் கான்வே என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. இன்றைய ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.