பாஜக சார்பில் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு 'சௌகாத்-இ-மோடி' கிட் விநியோகம்!

BJP to Distribute Saugat-e-Modi Kits to 32 lakh Muslims in Tamil : பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு சௌகாத்-இ-மோடி கிட் வழங்கப்பட உள்ளது.

BJP distributes 'Saugat-e-Modi' kits to 32 lakh Muslims ahead of Eid 2025 in Tamil rsk

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) சிறுபான்மை அணி, ஈத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 32 லட்சம் ஏழை முஸ்லிம்களுக்கு சிறப்பு கிட்களை விநியோகிக்கும் நோக்கில் "சௌகாத்-இ-மோடி" பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் டெல்லியில் உள்ள நிஜாமுதீனில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கும் இந்த முயற்சி, ஏழை முஸ்லிம் குடும்பங்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை உறுதி செய்யும். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 32,000 சிறுபான்மை மோர்ச்சா தொண்டர்கள் நாடு முழுவதும் உள்ள 32,000 மசூதிகளுடன் இணைந்து ஏழைகளுக்கு உதவ உள்ளனர்.

Eid 2025 - BJP Gives 'Saugat-e-Modi

பிஜேபி சிறுபான்மை மோர்ச்சாவின் தேசிய தலைவர் ஜமால் சித்திக், ரமலான் புனித மாதம் மற்றும் வரவிருக்கும் ஈத், புனித வெள்ளி, ஈஸ்டர், நௌரூஸ் மற்றும் இந்திய புத்தாண்டு போன்ற சந்தர்ப்பங்களில், சிறுபான்மை முன்னணி "சௌகாத்-இ-மோடி" பிரச்சாரம் மூலம் தேவைப்படுபவர்களை சென்றடையும் என்று பிரச்சாரத்தின் பரந்த பார்வையைக் கோடிட்டுக் காட்டினார். மாவட்ட அளவில் ஈத் மிலன் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Saugat-e-Modi Project

சிறுபான்மை மோர்ச்சாவின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் யாசிர் ஜிலானி கூறுகையில், "சௌகாத்-இ-மோடி" திட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சி (BJP) முஸ்லிம் சமூகத்தினரிடையே நலத்திட்டங்களை ஊக்குவிக்கும் மற்றும் பாஜக மற்றும் NDA-வுக்கு அரசியல் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிரச்சாரமாகும்.

Saugat-e-Modi Kit, Muslims, Ramadan

இந்த பிரச்சாரம் ரம்ஜான் மற்றும் ஈத் பண்டிகைகளை மையமாகக் கொண்டுள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பிரச்சாரத்தின் கீழ், பாஜக சிறுபான்மை மோர்ச்சா 32 லட்சம் முஸ்லிம் குடும்பங்களைச் சென்றடையவும், 3 ஆயிரம் மசூதிகளுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

Ramadan, Narendra Modi, BJP

"சௌகாத்-இ-மோடி" பிரச்சாரத்தின் கீழ் விநியோகிக்கப்படும் கிட்களில் பல்வேறு பொருட்கள் இருக்கும். உணவுப் பொருட்களுடன், ஆடைகள், சேமியா, பேரீச்சம்பழம், உலர் பழங்கள் மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கும். பெண்கள் கிட்டில் சூட்களுக்கான துணிகளும், ஆண்கள் கிட்டில் குர்தா-பைஜாமாக்களும் இருக்கும். வட்டாரங்களின்படி, ஒவ்வொரு கிட்டின் விலையும் சுமார் 500 முதல் 600 ரூபாய் வரை இருக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!