இந்திய பிரியாணி :
பிரியாணி என்றாலே உணவு பிரியர்களுக்கு தனி மகிழ்ச்சி தான். அரிசி, மசாலா, கறி, மற்றும் வாசனை பொருட்கள் சேர்ந்து பிரியாணியை ஒரு கலைநயமான உணவாக மாற்றுகின்றன. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பிரியாணி பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. சைவம், அசைவம் இரண்டிலுமே ஏராளமான பிரியாணி வகைகள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் எது சிறந்தது என யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொன்றும் ஒரு வகையில் தனித்துவமானதாகும். இங்கே, ஒவ்வொரு உணவு பிரியருக்கும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய சிறந்த 8 பிரியாணி வகைகளை பார்ப்போம்.
டாப் 8 பிரியாணி வகைகள் : 1. ஹைதராபாதி பிரியாணி :
முகலாயர் மற்றும் நவாப் கலாச்சாரத்தின் கலவையாக உருவான உணவு பிரியாணி. கவும் மஸாலா கலந்தது, ஆழமான சுவை கொண்டது.
தனியாக வெந்த இறைச்சியை, பச்சை மசாலா கலந்த அரிசியுடன் சேர்த்து "தம்" முறையில் வேக வைத்து செய்வதுண்டு.பிரியாணிகளில் ஹைதராபாத் பிரியாணிக்கு தனி இடம் உண்டு.
2. லக்னௌவி பிரியாணி :
நவாப்களின் அரண்மனையில் தோன்றிய, மென்மையான சுவை கொண்ட பிரியாணி. மிதமான மசாலா, மென்மையான இறைச்சி, தாளிப்பு வாசனை.
இறைச்சியை தயார் செய்து, மசாலா அரிசியுடன் மெதுவாக சேர்த்து சமைக்கும் முறை தனித்துவமானதாகும்.
4. டாக்கா பிரியாணி :
வங்காளதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் பிரபலமானது. காரமானதும், கோழிக்கறி அல்லது மட்டனுடன் சிறப்பாக பொருந்தும். பல்வேறு வகையான மணப்பொருட்களுடன், தீவிரமான வாசனை கொண்டிருக்கும்.
5. தலப்பாக்கட்டி பிரியாணி :
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிரியாணி வகை. குறிப்பாக திண்டுக்கலுக்கு பெயர் பெற்றது. காரமானதும், இறைச்சியில் முழுமையாக செரிந்திருக்கும் மசாலா. சிறப்பு அரிசியான "சீரகசம்பா" பயன்படுத்தி, பக்குவமான மசாலா சேர்த்து வேகவைக்கும் முறை.
6. மலபார் பிரியாணி :
கேரளாவில் பிரபலமானது, கோழிக்கறியுடன் பொருத்தமானது. மிதமான சுவை, குறைவான காரம், கொத்தமல்லி மற்றும் புதினா வாசனை. மிதமான மசாலா, பருப்பு மசாலா மற்றும் சிறப்பான தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும்.
8. சிந்தி பிரியாணி :
சிந்தி சமையலின் முக்கிய உணவு. ஆழமான மசாலா, காரமானது, உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சி கலந்தது. வெவ்வேறு மசாலாக்களை சேர்த்து, இறைச்சி மற்றும் அரிசியை தனித்தனியாக வேகவைக்கும் முறை.
இந்த 8 பிரியாணி வகைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சுவை கொண்டவை. பிரியாணி என்பது வெறும் உணவு அல்ல, அது கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் உணவு பிரியர்களுக்கு பெருமை தரும் உணவுப் பாணியாகும். உணவின் ருசியையும், மணத்தையும் ஆராய்ந்த உணவு பிரியர்கள், கண்டிப்பாக இந்த பிரியாணிகளை அனுபவிக்க வேண்டும்.