manimegalai a | Updated: Mar 25, 2025, 6:50 PM IST
YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் மூலம் இரண்டு குடும்பங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி இயக்குனர் கூறியுள்ளார். நயன்தாராவின் பள்ளி நண்பர் சித்தார்த். நயன்தாராவின் கணவராக மாதவன் நடித்துள்ள நிலையில் அவர் ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளார். தன்னுடைய திறமை மூலம் நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவ நினைக்கிறார். ஆனால் அவரின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. அதனால் தன்னுடைய குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருக்கிறார்.
அன்பான குடும்பம் மற்றும் குழந்தைக்காக ஆசைப்படும் நயன்தாராவின் கனவு நிறைவேறுகிறதா? சித்தார்தின் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மாதவன் மற்றும் நயன்தாரா வாழ்க்கையில் பிரபதிபலிக்கிறது என்பது பற்றி விறுவிறுப்பான கதைக்களத்தில் இப்படம் உருவாங்கி உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தை எஸ். சஷிகாந்த், இயக்கி - தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.