SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழையில் நனைய தயாரா? குலுங்கப்போகும் ஹைதராபாத்!

Published : Mar 25, 2025, 01:06 PM IST
SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழையில் நனைய தயாரா? குலுங்கப்போகும் ஹைதராபாத்!

சுருக்கம்

ஐபிஎல்லில் மார்ச் 27 அன்று SRH மற்றும் LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

SRH vs LSG: IPL match with Thaman music: இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் திருவிழா நடந்து வருகின்றன. கடந்த 22ம் தேதி ஐபிஎல் தொடங்கிய நிலையில், தினமும் இரண்டு அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎல் தொடக்க நாளின்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, வருண் தவான் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.

தமனின் இசை நிகழ்ச்சி

இதேபோல் ஐபிஎல் நடைபெறும் முக்கிய நகரங்களின் மைதானங்களில் தொடகக் விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த அனிருத்தின் இசை நிகழ்ச்சி சிஎஸ்கே ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இதேபோல் ஹைதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரபல இசையமைப்பாளர் தமனின் இசை நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்பு

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வரும் 27ம் தேதி ஹைதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக தான் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் தலைமையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.

தெலுங்கு படத்தில் அறிமுகமான டேவிட் வார்னர்! ஸ்ரீலீலாவுடன் குத்தாட்டம்! வைரல் வீடியோ!

கேம் சேஞ்சர், குண்டூர் காரம் பாடல்கள் 

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் தமன், ''நம்முடைய சொந்த கிரிக்கெட் மைதானத்தில் ஓஜி (OG), குண்டூர் காரம் (Guntur Kaaram) , டாகு மகாராஜ் (Daaku Maharaaj) மற்றும் கேம் சேஞ்சர் (Game Changer) ஆகிய திரைப்படங்களின் பாடல்களை பாட உள்ளோம். இசை நிகழ்ச்சியை காண ரெடியாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். 

மீண்டும் ரன் மழை பொழியுமா SRH

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொந்த மைதானம் ஹைதராபாத் என்பதால் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இதேபோன்று லக்னோவுக்கு எதிரான ஆட்டத்திலும் SRH ரன் மழை பொழியும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

ஐபிஎல் போட்டிக்கு நடுவே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!