ஐபிஎல் போட்டிக்கு நடுவே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்தது!
இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுலின் மனைவி, அதியா ஷெட்டிக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை தற்போது ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின், நட்சத்திர விளையாட்டு வீரரான கே.எல்.ராகுல், கடந்த 2023-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை திருணம் செய்து கொண்டார். மும்பையில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்த நிலையில், இதில் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல்
அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆரபத்தில் சுனில் ஷெட்டிக்கு இந்த மகள் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், பின்னர் மகளின் பிடிவாதத்தின் காரணமாகவே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
கடந்த ஆண்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அதியா ஷெட்டி
திருமணத்திற்கு பின்னர், மும்பையில் வசித்து வந்த கே.என்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் கடந்த ஆண்டு தங்களுக்கு, குழந்தை பிறக்க உள்ள தகவலை வெளியிட்டனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் கூட அதியா ஷெட்டி தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டார்.
பெண் குழந்தைக்கு தந்தை ஆனார் கே.எல்.ராகுல்
இதைத்தொடர்ந்து, ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை கிரிக்கெட் வீரர் கே.என்.ராகுல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் அவருடைய வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஐபிஎல் 2025 தொடரின் போது தந்தையாகியுள்ளார். இந்த சீசனில் டெல்லி அணிக்காக கே.என்.ராகுல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
துபாயில் இந்திய அணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது: கே.எல்.ராகுல் மகிழ்ச்சி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.