MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.50 கோடிக்கு வீடும் வரல... காரும் வரல! கே.எல்.ராகுல் திருமண பரிசு குறித்த உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்

ரூ.50 கோடிக்கு வீடும் வரல... காரும் வரல! கே.எல்.ராகுல் திருமண பரிசு குறித்த உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்

கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி திருமணத்துக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2023, 01:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல், தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை கடந்த ஜனவரி 24-ந் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

25

கே.எல். ராகுல் கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு கிரிக்கெட் பிரபலங்களான தோனி ரூ.80 லட்சம் மதிப்பிலான பைக் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும், அதேபோல் விராட் கோலி ரூ.2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை கே.எல்.ராகுலுக்கு பரிசாக வழங்கியதாக தகவல்கள் பரவி வந்தன.

35

அதேபோல் நடிகை அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பதால், அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியதாகவும், குறிப்பாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடி கார் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!

45

அதுமட்டுமின்றி மகளுக்காக நடிகர் சுனில் ஷெட்டி ரூ.50 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றையும் பரிசாக வழங்கியதாகவும், இவ்வாறு கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி திருமணத்துக்கு வந்த பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. கடந்த இருதினங்களாக இதுகுறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வந்தன.

55

இந்நிலையில், இதனை மணமக்களின் குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணத்திற்கு வீடு, கார் போன்ற பரிசுகள் வந்ததாக கூறப்படும் தகவல் எதுவும் உண்மையில்லை, தயவு செய்து யாரும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கே. எல். ராகுல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Recommended image2
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image3
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved