MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • உன்னை நம்புனதுக்கு.. பேருந்திலேயே அபிஷேக் சர்மாவை வெளுத்து வாங்கிய கம்பீர்.. வைரல் வீடியோ!

உன்னை நம்புனதுக்கு.. பேருந்திலேயே அபிஷேக் சர்மாவை வெளுத்து வாங்கிய கம்பீர்.. வைரல் வீடியோ!

நடப்பு டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் டக் அவுட் ஆனார். பின்பு நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளிலும் டக் அவுட்டில் வெளியேறினார்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 23 2026, 10:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்திய அணி படுதோல்வி
Image Credit : Social Media

இந்திய அணி படுதோல்வி

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி வீரர்களை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இடையேயான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அபிஷேக் சர்மாவிடம் பேசிய கவுதம் கம்பீர்

அதாவது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய வீரர்கள் பின்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு அணியின் பேருந்தில் சென்றனர். அப்போது டிரைவருக்குப் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் கவுதம் கம்பீர், ஃபார்மில் இல்லாத அபிஷேக் சர்மாவிடம் மிகவும் தீவிரமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. 

அணி நிர்வாகத்தால் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் ஃபார்முக்கு திரும்ப முடியாமல் போன அபிஷேக் சர்மாவுக்கு கடுதம் கம்பீர் அறிவுரைகளை வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

23
கடுமையாக சொதப்பிய அபிஷேக் சர்மா
Image Credit : Getty

கடுமையாக சொதப்பிய அபிஷேக் சர்மா

நடப்பு டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் டக் அவுட் ஆனார். பின்பு நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளிலும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் தடுமாற்றத்துடன் 15 ரன்கள் மட்டுமே அடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார்.

Gautam Gambhir started coaching Abhishek Sharma right there on the team bus. But sir, please stop this show in front of the cameras. You should have learned from Rohit Sharma how to explain things to a player, how to build their confidence, and how to bring out their best… pic.twitter.com/MmBKCRqY6d

— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 23, 2026

Related Articles

Related image1
மனுசனடா நீங்க.. 19 சிக்சர்கள்.. 254 ரன்கள்.. ஜிம்பாப்வேயை கதற கதற அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. உலக சாதனை!
Related image2
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
33
கவுதம் கம்பீர் சொன்னது என்ன?
Image Credit : AFP

கவுதம் கம்பீர் சொன்னது என்ன?

பிப்ரவரி 26 அன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தியாவின் அடுத்த போட்டி வாழ்வா சாவா போராட்டம் ஆகும். இந்த போட்டியில் தோற்றால் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி விடும். ஆகவே கம்பீர் மற்றும் அபிஷேக் இடையேயான இந்த விவாதம் வரவிருக்கும் முக்கியமான மோதலுக்கு அணியை தயார்படுத்துவதில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

 பவர்பிளேயில் எப்படி விளையாட வேண்டும்? என கம்பீர் அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இதனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா எப்படி விளையாடுவார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய அணியின் பின்னடைவுக்கு இதுதான் காரணமா? உலகக்கோப்பை வெல்ல மாற வேண்டிய முக்கிய மாற்றங்கள்!
Recommended image2
மனுசனடா நீங்க.. 19 சிக்சர்கள்.. 254 ரன்கள்.. ஜிம்பாப்வேயை கதற கதற அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. உலக சாதனை!
Recommended image3
டி20 உலகக்கோப்பை தொடர்.. இந்தியாவை முந்தும் பாகிஸ்தான்..! ஆதிக்கம் செலுத்தும் பாக். ஸ்பின்னர்கள்
Related Stories
Recommended image1
மனுசனடா நீங்க.. 19 சிக்சர்கள்.. 254 ரன்கள்.. ஜிம்பாப்வேயை கதற கதற அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. உலக சாதனை!
Recommended image2
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved