MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மனுசனடா நீங்க.. 19 சிக்சர்கள்.. 254 ரன்கள்.. ஜிம்பாப்வேயை கதற கதற அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. உலக சாதனை!

மனுசனடா நீங்க.. 19 சிக்சர்கள்.. 254 ரன்கள்.. ஜிம்பாப்வேயை கதற கதற அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. உலக சாதனை!

T20 WC 2026: West Indies Crush Zimbabwe: மறுமுனையில் தனது ருத்ரதாண்டவத்தை தொடர்ந்த ரோமன் பவல் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களும் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

2 Min read
Author : Rayar r
Published : Feb 23 2026, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போட்டி
Image Credit : X

வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போட்டி

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ளது. தொடக்கத்தில் பிரண்டன் கிங் (9 ரன்), சாய் ஹோப் (14) விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. 

ஆனால் பின்பு ஜோடி சேர்ந்த சிம்ரன் ஹெட்மெயர், ரோமன் பவலும் சிக்சர் மழை பொழிந்தனர். ஜிம்பாவ்வேயின் கேப்டனும், மெயின் பவுலருமான சிக்கந்தர் ராஸா பந்தை சகட்டு மேனிக்கு சிக்சருக்கு பறக்க விட்ட ஹெட்மெயர் பாஸ்ட் பவுலர்களையும் பந்தாடினார்.

ஹெட்மெயர் சிக்சர் மழை

ஹெட்மெயர் 2 முறை கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஜிம்பாப்வே வீரர்கள் வீணடித்தனர். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹெட்மெயர் 19 பந்துகளில் அரை சதம் விளாசினார். மறுபக்கம் தொடக்கத்தில் நிதானம் காட்டிய ரோமன் பவல் பின்னர் தனது பங்குக்கு சிக்சர்களை விளாசித் தள்ளினார்.

 ஜிம்பாப்வே பவுலர்களுக்கு எங்கு பந்து வீசுவது என்பதே தெரியவில்லை. தொடர்ந்து வெளுத்துக்கட்டிய ஹெட்மெயர் குறைந்த பந்துகளில் சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் 34 பந்தில் 85 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஹெட்மெயர் மொத்தம் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் நொறுக்கினார்.

22
ரோமன் பவல் பேயாட்டம்
Image Credit : Getty

ரோமன் பவல் பேயாட்டம்

மறுமுனையில் தனது ருத்ரதாண்டவத்தை தொடர்ந்த ரோமன் பவல் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களும் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 'பேய் போனால் பூதம் வரும்' என்ற சொல்லுக்கு ஏற்ப அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (13 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள்), ரொமாரியோ ஷெப்பர்ட் (10 பந்தில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள்), ஜேசன் ஹோல்டர் (4 பந்தில் 2 சிக்சர்களுடன் 13 ரன்கள்) என களத்துக்கு வந்தவர்கள் எல்லாம் பேயாட்டம் ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 245 ரன்கள் என இமாலய ஸ்கோர் குவித்தது.

உலக சாதனை

நடப்பு டி20 உலக்கோப்பையில் ஒரு அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும். இது 2007 T20 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 260/6 ரன்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்சமாகும். T20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி 250 ரன்களைக் கடப்பது இது இரண்டாவது முறையாகும். 

வெஸ்ட் இண்டீஸ் அணி மொத்தம் 19 சிக்சர்களும், 16 பவுண்டரிகளும் நொறுக்கியது. இண்டீஸ் அடித்த 19 சிக்ஸர்கள், 2014 பதிப்பில் சில்ஹெட்டில் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து அடித்த 19 சிக்ஸர்கள் என்ற சாதனையை சமன் செய்தது.

Related Articles

Related image1
SKY செய்த 'அந்த' 3 மெகா தவறு.. மரண அடி வாங்கிய இந்தியா.. செமி பைனல் சான்ஸ் இருக்கா? முழு அலசல்!
Related image2
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை தொடர்.. இந்தியாவை முந்தும் பாகிஸ்தான்..! ஆதிக்கம் செலுத்தும் பாக். ஸ்பின்னர்கள்
Recommended image2
SKY செய்த 'அந்த' 3 மெகா தவறு.. மரண அடி வாங்கிய இந்தியா.. செமி பைனல் சான்ஸ் இருக்கா? முழு அலசல்!
Recommended image3
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
Related Stories
Recommended image1
SKY செய்த 'அந்த' 3 மெகா தவறு.. மரண அடி வாங்கிய இந்தியா.. செமி பைனல் சான்ஸ் இருக்கா? முழு அலசல்!
Recommended image2
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved