கிரிக்கெட் விளையாடியபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

கிரிக்கெட் விளையாடியபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Bangladesh player Tamim Iqbal suffers heart attack while playing cricket ray

Tamim Iqbal suffered a heart attack while playing cricket: வங்கதேசத்தின் டாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது முன்னாள் சர்வதேச வங்கதேச கிரிக்கெட் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தமீம் இக்பால். வங்கதேச அணியில் கேப்டனாகவும் இருந்துள்ள இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால்

Latest Videos

36 வயதான தமீம் இக்பால் ஓய்வு பெற்ற பிறகு சில ஊள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இக்பால் வர்ணனையாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வங்கதேசத்தின் டாக்கா பிரீமியர் லீக் எனப்படும் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.

களத்தில் மாரடைப்பு ஏற்பட்டது

இந்நிலையில், முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி போட்டி நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக டாஸில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பீல்டிங் செய்ய களமிறங்கியபோது  தமீம் இக்பாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வலியால் அலறித்துடித்த அவரை உடனடியாக மைதானத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கண்டனர். பின்பு அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 

அங்கு தமீம் இக்பாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) மருத்துவ அதிகாரி டெபாஷிஸ் சவுத்ரி AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதுவரை எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அவரது இதயம் இப்போது சிறப்பாக செயல்படத் தொடங்கியது. தமீம் விரைவல் குணமடைந்து வருவார்'' என்றார்.

IPL: தோனியிடம் சேட்டையை காட்டிய தீபக் சாஹர்! கடைசியில் 'தல' கொடுத்த ரிப்ளை!

விரைவில் குணமடைய பிரார்த்தனை

தமீம் இக்பால் டாக்காவின் புறநகரில் உள்ள சவாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமீம் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அணி அதிகாரி தாரிகுல் இஸ்லாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், தமீம் இக்பாலின் உடல்நிலை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முகமது யூனுஸ் சார்பாக துணை பத்திரிகை செயலாளர் அபுல் கலாம் ஆசாத் மஜும்தர் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிஜாம் உதின் சவுத்ரியுடன் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

Ball Tampering: சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தினார்களா? பரபரப்பு வீடியோ! 2 ஆண்டு தடை?

vuukle one pixel image
click me!