IPL CSK Players Accused For Ball-Tampering: ஐபிஎல் தொடரில் நேற்றைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டு தடைவிதிக்க கோரிக்கை வலுத்து வருகிறது.
IPL CSK Players Accused For Ball-Tampering: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய சிஎஸ்கேவின் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து 12 ஆண்டுகளாக தொடக்க போட்டியில் தோற்கும் சோகம் தொடர்ந்து நடந்து வருகிறது. பலம்வாய்ந்த மும்பையை வீழ்த்தியதை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிஎஸ்கேவை சொந்த மண்னில் யாராக இருந்தாலும் வீழ்த்த முடியாது என கூறி வருகின்றனர்.
பந்தை சேதப்படுத்தினார்களா சிஎஸ்கே வீரர்கள்?
இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிவேகமாக பரப்பி வருகின்றனர்.
CSK vs RCB மேட்ச் டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி இதுதான்! எப்படி புக் செய்வது?
வைரலாக பரவும் வீடியோ
அந்த வீடியோ காட்சியில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது பந்தை சேதப்படும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும், ஆகவே சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் எனவும் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பது போலவும் அதனை வாங்கி கொண்ட ருதுராஜ் தனது பாக்கெட்டில் மறைத்து வைப்பது போலவும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
வைரலாக பரவும் வீடியோ இதுதான்
சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க கோரிக்கை
இந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து அவர்கள் பந்தை தேய்த்து சேதப்படுத்தியுள்ளதாக மற்ற ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை ஏதுவென்று தெரியவில்லை. ஏற்கெனவே சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிஎஸ்கே அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கேவுக்கு பயம் காட்டிய ஆட்டோ ஓட்டுநர் மகன்! 3 முக்கிய விக்கெட்! யார் இந்த விக்னேஷ் புதூர்?
