இதுக்குத்தான் ரூ.12.5 கோடியா? படு மோசமான சாதனை படைத்த பவுலர்!

ஐபிஎல் 2025 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் கொடுத்து மோசமான சாதனை படைத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286/6 ரன்கள் குவித்தது, இஷான் கிஷன் சதம் அடித்தார்.

Rajasthan Bowler Bought for Rs 12.5 Crore Concedes 76 Runs in 4 Overs, Fans Shocked sgb

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மோசமான சாதனையைப் படைத்தார். ஆர்ச்சர் வீசிய நான்கு ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான பந்துவீச்சாகப் பதிவாகியுள்ளது.

ஐபிஎல் 2024 இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மோஹித் சர்மா 73 ரன்கள் விட்டுக்கொடுத்ததே முந்தைய மோசமான சாதனையாக இருந்தது. அதனை ஆர்ச்சர் முறியடித்துள்ளார். ஆர்ச்சர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஓவருக்கு 19 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை வாரி வழங்கினார்.

Latest Videos

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 286/6 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. அந்த அணிக்காக முதல் முறையாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். 11.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கிஷன், 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கேவுக்கு பயம் காட்டிய ஆட்டோ ஓட்டுநர் மகன்! 3 முக்கிய விக்கெட்! யார் இந்த விக்னேஷ் புதூர்?

டிராவிஸ் ஹெட் (31 பந்துகளில் 67 ரன்கள், ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன்) ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்ட பிறகு, இஷான் கிஷன் ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்தார். ஹென்ரிச் கிளாசென் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் சிறிய கேமியோக்கள் மூலம் பங்களித்தனர்.

ஹெட் மற்றும் கிஷன் இடையேயான பார்ட்னர்ஷிப் மூலம் ஹைதராபாத் அணி 85 ரன்கள் சேர்த்தது. ஹெட் 31 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணிக்காக தேஷ்பாண்டே சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அவர் நான்கு ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தீக்‌ஷனா 4 ஓவர்களில் 52 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பய புள்ளைக்கு குசும்ப பாத்தீங்களா; காவ்யா மாறனுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த இஷான் கிஷன்!

vuukle one pixel image
click me!