
MS Dhoni Fastest Stumping to Suryakumar Yadav : இந்திய அணியின் ஜாம்பவான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையால் மீண்டும் ஒருமுறை அனைவரையும் வியக்க வைத்தார். 43 வயதிலும் தோனி மின்னலை விட வேகமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து தனது விக்கெட் கீப்பர் திறமையை காட்டினார். இது ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியின் போது நடந்தது.
பய புள்ளைக்கு குசும்ப பாத்தீங்களா; காவ்யா மாறனுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த இஷான் கிஷன்!
இந்த நிகழ்வு நூர் அகமது வீசிய 10.3வது ஓவரில் நடந்தது. கூக்லி பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் க்ரீஸை விட்டு வெளியே வந்து பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படவில்லை. உடனடியாக மின்னலை விட வேகமாக தோனி பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இந்த அற்புதமான ஸ்டம்பிங்கை தோனி வெறும் 0.12 வினாடிகளில் முடித்தார். தற்போது இந்த ஸ்டம்பிங் வீடியோ வைரலாகி வருகிறது.
சிஎஸ்கேயின் கோட்டையான சேப்பாக்கத்தில் ரன் எடுக்காமலேயே மோசமான சாதனையை படைத்த ரோகித் சர்மா!
இந்த ஸ்டம்பிங்கிற்கு பிறகு மும்பை அணி பெரிய ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. நூர் அகமது (4/18), கலீல் அகமது (3/29) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு மும்பை அணியை கட்டுப்படுத்தியது. 156 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து எளிதாக இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் கெய்க்வாட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் மைதானத்திற்குள் தோனி பேட்டிங் செய்ய வந்தார். அவர் 2 பந்துகள் மட்டுமே பிடித்தார்.
நூர் சுழல், ரச்சின் அதிரடி: கடைசியி கிடைத்த தோனியின் தரிசனம்; மும்பையை வீழ்த்திய CSK