திரும்ப திரும்ப ரிலீஸ் - 1000 நாட்களை கடந்து ஓடிய மாஸ் ஹீரோவின் படம் எது தெரியுமா?

மீண்டும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மொத்தமாக 1000 நாட்களை கடந்து ஓடிய மாஸ் ஹீரோவின் படம் எது என்பது பற்றி பார்க்கலாம்.
 

Do you know which mass hero film run for over 1000 days? mma

சினிமாவில் ஒரு படம் ஒரு வாரம், ஒரு மாதம் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கும் போது எப்படி 1000 நாள் ஓடியது நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு முன்னதாக ஒரு படம் 300 நாட்கள் எல்லாம் ஓடியிருக்கிறது. அப்படி ஓடிய படங்களில் சந்திரமுகி, கில்லி, காதல் கோட்டை போன்ற படங்களும் சில. சினிமா பின்னணியை வைத்து நடிக்க வந்தவர் தான் அந்த மாஸ் ஹீரோ. 

ர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார்:

அவர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். அதுவும், அப்பாவுடன் பல படங்களிலும் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே டான்ஸில் கலக்கியவர். அந்த நடிகர் வேறு யாருமில்லை அவர் தான் மாஸ் ஹீரோ சிம்பு. காதல் அழிவதில்லை படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிம்பு இன்று தக் லைஃப் வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Kayadu Lohar : டிராகன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்; சிம்புவுடன் ஜோடி சேரும் கயாடு லோகர்!


சிம்புவின் படங்கள்

தூம், அலை, கோவில், குத்து, மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, போடா போடி, இது நம்ம ஆளு, செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

விண்ணைத்தாண்டி வருவாயா:

தொட்டி ஜெயா, காளை, சிலம்பாட்டம் போன்ற படங்கள் தோல்வி கொடுக்கவே அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக வெளியான படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படம் தான் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. 

திருமணத்துக்கு நோ சொன்ன சிம்பு பட ஹீரோயின்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

1000 நாள் ஓடிய படம்

காதலை மையப்படுத்திய இந்த படம் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படவே 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடும் படமாக விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது. பிவிஆர் திரையரங்கில் சிம்புவின் இந்த படம் தான் ரீரிலீஸ் மூலமாக 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

Latest Videos

vuukle one pixel image
click me!