Sonali Sood : விபத்தில் சிக்கிய சோனு சூட் மனைவி கவலைக்கிடம்? நடிகரின் உருக்கமான தகவல்!

நடிகர் சோனு சூட் மனைவி, சகோதரி, மற்றும் மகன் பயணித்த கார் விபத்தில் சிக்கி தற்போது மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து சோனு சூட் உருக்கமான தகவலை கூறியுள்ளார்.

Sonu Sood Wife Sonali Injured in Car Accident latest update mma

நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி, நேற்று தன்னுடைய சகோதரி மற்றும் மகனுடன் மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்தில் சிக்கினார். சோனாலிக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரின் சகோதரி மற்றும் மகன் இருவரும் ஐசியூவில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இவர்கள் பயணித்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதுதொடர்பான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது.
 

Sonu Sood Wife Sonali Injured in Car Accident latest update mma
விபத்து குறித்து சோனு சூட் கூறிய தகவல்  :

இந்த விபத்து குறித்து அறிந்த சோனு சூட், இரவோடு இரவாக நாக்போர் விரைந்தார். மேலும் இந்த விபத்து இவர்கள் பயணித்த கார் ட்ரக் மீது மோதியதால்  ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விபத்தில் காரின் நிலையைப் பார்த்தால் அதிவேகத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது தெரிகிறது. இதுகுறித்து பேசிய நடிகர், மனைவி தேறி வருகிறார். ஆனால், அவருக்கு காயங்கள் அதிகமாக உள்ளது. விபத்தைப் பார்த்தால், அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. 

பண மோசடி வழக்கில் பிடிவாரண்ட் - சோனு சூட் விளக்கம்!
 


நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

சோனாலி சூட் , சகோதரி - மகன் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் 2 மூன்று நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

'ரியல் ஹீரோ' சோனு சூட்டின் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தச் சம்பவம், பாலிவுட் பிரபலங்கள், மற்றும் சோனு சூட்டின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சோனு சூட் நடிப்பை விட, கொரோனா காலத்தில் இருந்து இப்போது வரை பலருக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். அவர் எப்போதும் ஏழைகளுக்கு உதவ தயங்கியதே இல்லை. இதனால் அவரை 'ரியல் ஹீரோ' என ரசிகர்கள் அழைக்கின்றனர்.

Bollywood : "ஐயய்யோ நான் குடிக்க மாட்டேன்" - ஆல்கஹாலை பார்த்தாலே அலறும் டாப் 8 பாலிவுட் நடிகர்கள்!! 
 

சோனு சூட் காதல் மனைவி சோனாலி:

சோனு சூட் , சோனாலியை செப்டம்பர் 25, 1996ல் திருமணம் செய்தனர். இவர்களது காதல் கதை நாக்பூரில் இன்ஜினியரிங் படிக்கும்போது தொடங்கியது. அப்போது சோனாலி எம்பிஏ படித்து வந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நடிகர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை தொழில் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

vuukle one pixel image
click me!