Samantha Engagement Rumours : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஊடகங்களும் அவர் மீது முழு கவனம் செலுத்தி வருகின்றன. இப்போது அவர் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. நாக சைதன்யாவுடன் திருமண விவாகரத்துக்குப் பிறகு, நம்பிக்கையுடன் முன்னேறி படங்களில் நடித்து வரும் சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளாரா என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.
Samantha
சமந்தாவுடன் விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா டிசம்பர் 2024-ல் நடிகை ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், சமந்தா தி ஃபேமிலி மேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி போன்ற தொடர்களில் பணியாற்றிய ராஜ் & டிகே ஜோடியில் ஒருவரான ராஜ் நிடிமோருவுடன் டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் இப்போது அந்த செய்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு பெரிய வதந்தி கிளம்பியுள்ளது.
Samantha - Raj
அவரது கை விரலில் வைர மோதிரம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் அவரது ரசிகர்கள் ராஜ் நிடிமோருவுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் எந்த அப்டேட்களும் இல்லை.
Samantha Engagement Rumours
சமீபத்தில் பிக்கல் பால் போட்டியில் இருவரும் கைகோர்த்து காணப்பட்டனர். அந்த சமயத்திலும் சமந்தா மீது டேட்டிங் வதந்திகள் எழுந்தன. சமீபத்தில் மீண்டும் சாம்-ராஜ் நிடிமோரு ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். இப்போது இதன் காரணமாக மீண்டும் இருவரும் குறித்து இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளனர்.
Samantha Diamond Ring secret
மாதத்திற்குள் இரண்டாவது முறையாக ஒன்றாக காணப்பட்டதால் டேட்டிங் வதந்தி வைரலாகி வருகிறது. எது எப்படி இருந்தாலும் சமந்தா, ராஜ் நிடிமோரு விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த செய்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் தங்கள் மீது வரும் டேட்டிங் வதந்திகளுக்கு இன்று வரை சமந்தாவோ அல்லது ராஜோ பதிலளிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... சமந்தா போனில் 'லவ்' என்ற பெயரில் உள்ள நம்பர்! யாருடையது தெரியுமா?