நடிகையை தாக்கிவிட்டு நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! திரையுலகில் பரபரப்பு!
ஹைதராபாத்தில், நடிகை தாக்கப்பட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில், நடிகை தாக்கப்பட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்த பாலிவுட் நடிகை ஒருவரை அனுமதி இன்று அவரின் அறைக்குள் நுழைந்து, நடிகையை தாக்கப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர் வைத்திருந்த தங்க நகைகள் சிலவற்றை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக கடை திறப்பு விழாக்களுக்கு, பிரபலமான நடிகர் நடிகைகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அவர்களின் கைகளால் திறப்பு விழா நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் கடைக்கு அதிக விளம்பரம் கிடைப்பது மட்டும் இன்றி, நடிகர் - நடிகைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக கடை முன் ரசிகர்கள் கூட்டம் கூடி விடுவார்கள்.
அந்த வகையில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கி இருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை கூறியுள்ளதாவது, "தான் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஹோட்டல் அறைக்குள் 2 பெண்களும் மற்றும் 2 இளைஞர்களும் வந்தனர். என்னை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்டனர். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது... அவர்கள் என்னை பெட்டில் அமுக்கி என் 2 கைகளையும், கால்களையும் கட்டிவிட்டு அங்கிருந்த என்னுடைய பொருட்களை சூறையாடி சென்றதாக தெரிவித்துள்ளார்.
நடிகையின் பையில் இருந்த பணம் மற்றும் சில தங்க நகைகளையும் அவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நடிகை இடம் 50,000 பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு, இந்த செயலில் ஈடுபட்ட நான்கு பேர் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.