சிகான் ஹூசைனியின் மரணம் - பழைய நினைவுகளை பகிர்ந்து பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை!

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண், மிகவும் உருக்கமாக சிகான் ஹூசைனியின் மரணம் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Pawan Kalyan Condolences Statement for shihan hussaini death mma

இந்த அறிக்கையில் பவன் கல்யாண் கூறியுள்ளதாவது, "தற்காப்பு கலை ஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது புகழ் பெற்ற தற்காப்பு கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் சிகான் ஹூசைனி காலமானார் என்பதை அறிந்து, நான் மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன் தற்காப்பு கலை குரு ஹூசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது.
 

Pawan Kalyan Condolences Statement for shihan hussaini death mma
29ஆம் தேதி சென்னை சென்று ஹூசைனியை பார்க்க முடிவு செய்துள்ளேன்:

 சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து, சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டி இருந்ததால் நான் தகுந்த ஏற்பாடுகளை செய்வேன் என்று கூறினேன். இந்த மாதம் 29ஆம் தேதி சென்னை சென்று ஹூசைனியை பார்க்க முடிவு செய்துள்ளேன். இதற்கிடையில் இவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 


அவர் சொன்னதை நான் 100% பின்பற்றுவேன்:

 சென்னையில் ஹூசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100% பின்பற்றுவேன். முதலில் அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை. நான் தற்போது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது என்று அவர் கூறினார். ஆனால் விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற பயிற்சி பெற்றேன். அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும் நான், தம்முடு படத்தில் கிக் பாக்ஸராக நடித்த பெரிதாக உதவியது.

என் உடலை இத்தனை நாட்களுக்கு அடக்கம் செய்யக்கூடாது - இறக்கும் முன் ஹுசைனி சொன்னதென்ன?
 

என்னை தன்னுடன் அழைத்து செல்வார்:

ஹூசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் 3000 பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டை பிரபலப்படுத்த ஹூசைனி பாடுபட்டார் அவர் Archery அசோசியேசன் ஆப் தமிழ்நாடு வில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். ஹூசைனியின் திறமைகள், தற்காப்பு கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முக திறமைசாலி அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்த அவர் ஊக்கம் அளிக்கும் உரைகளை வழங்கினார். சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்த சொல்லும் போது என்னை தன்னுடன் அழைத்து செல்வார்.
 

பன்முக திறமை கொண்ட ஹூசைனி:

பன்முக திறமை கொண்ட ஹூசைனி இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகளை இன்றும் எளிதாக கிடைக்கச் செய்ய விரும்பினார்.  அவரது மரணத்திற்கு பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்கிற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பவன் கல்யாண் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

vuukle one pixel image
click me!