மார்ச் 27ந் தேதி வீர தீர சூரன் படத்துடன் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?

Published : Mar 25, 2025, 02:24 PM IST

மார்ச் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது நான்காவது வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆகின்றன.

PREV
15
மார்ச் 27ந் தேதி வீர தீர சூரன் படத்துடன் இத்தனை படங்கள் மல்லுக்கட்ட போகிறதா?

March 27 Theatre release Movies : மார்ச் மாதம் தமிழ் சினிமாவுக்கு சோதனையான ஒரு மாதமாகவே அமைந்தது. இந்த மாதம் மூன்று வாரங்கள் கடந்த போதிலும் இதுவரை தமிழில் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. இந்த மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன், ரியோ ராஜ் நடித்த ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில், இறுதியாக மார்ச் 27-ந் தேதி ரம்ஜான் விடுமுறையை ஒட்டி தமிழில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

25
வீர தீர சூரன் பாகம் 2

எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் வீர தீர சூரன். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படம் மார்ச் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.

35
எம்புரான்

வீர தீர சூரன் படத்துக்கு போட்டியாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு பான் இந்தியா படம் எம்புரான். இப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர் உள்பட மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் வருகிற மார்ச் 27ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் வீர தீர சூரனுக்கு நிகரான தியேட்டர்கள் எம்புரான் படத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... இப்படி ஒரு காலேஜா? எம்புரான் படத்துக்காக லீவும் விட்டு டிக்கெட்டும் Free-யா கொடுத்த கல்லூரி!

45
தி டோர்

தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் பாவனா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘தி டோர்’. இப்படத்தை ஜெய் தேவ் இயக்கி உள்ளார். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நவீன் ராஜன் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

55
சிக்கந்தர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சிக்கந்தர் படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 30ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடைசியாக தர்பார் படத்தை இயக்கிய முருகதாஸ், சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கந்தர் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சிக்கந்தர் டீசர்: கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் SK-வை வைத்து மாஸ் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

Read more Photos on
click me!

Recommended Stories