Anna Serial: ரிலீஸ் ஆன வெங்கடேஷ்; ரத்னா விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த சண்முகம்?
சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் இன்றைய தினம், ரத்னா விஷயத்தில் சண்முகம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் இன்றைய தினம், ரத்னா விஷயத்தில் சண்முகம் எடுத்த முடிவு என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
'அண்ணா' சீரியலின் நேற்றைய எபிசோடில், ரத்னா பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைத்து சிறைக்கு சென்ற வெங்கடேஷ் ஜெயிலில் இருந்து, தண்டனை காலம் முடிந்து வெளியே வருகிறான். நேராக ஸ்கூலுக்கு சென்று, அறிவழகனிடம் சண்டையிட்ட போடுவதோடு, ரத்னாவை பார்த்து இவனை கல்யாணம் பண்ணிக்க தானே, என்னை கழட்டி விட்ட? உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வாழ விட மாட்டேன் என்று சவால் விட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறான்.
அவன் சொன்ன வார்த்தைகளை நினைத்து கொண்டு, வீட்டுக்கு வரும் ரத்னா ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல, சென்னையிலிருந்து வந்த சண்முகம் இதை கேட்டு ஆத்திரத்தில் வெங்கடேசை வெட்டப் போகிறேன் என அறிவாலோடு கிளம்ப பரணி சண்முகத்தை தடுத்து நிறுத்துகிறாள். நீ வெட்டுறதால இதுக்கு தீர்வு வரபோறது இல்ல, முதல்ல அந்த வெங்கடேஷ் கிட்ட இருந்து, ரத்னாவுக்கு விடுதலை வாங்கி கொடுக்கணும் அதுக்கு பஞ்சாயத்து கூட்டு என்று சொல்ல, சண்முகம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொல்கிறான்.
Anna Serial: சௌந்தரபாண்டி சொன்ன விஷயம்; சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!
பின்னர் அறிவழகன் வீட்டுக்கு வரும் சண்முகம், அவன் ரத்னா சிறுவயதில் இருந்து பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருப்பது தெரிய வருகிறது. இதை கவனித்த கனி, அண்ணா அக்காவை ஏன் அறிவழகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என சொல்ல, பரணி மற்றும் சண்முகம் இருவருக்கும் அது சரியாகப்பட அறிவழகன் வீட்டில் பேசுவதற்கு முடிவு செய்கிறான்.
இப்படியான நிலையில், அடுத்து நடிக்க போவது என்ன? ரத்னா இந்த திருமணத்திற்கு ஒப்பு கொள்வாளா... வெங்கடேஷ் இந்த திருமணத்திற்கு எதிராக என்னென்ன சதி செய்ய போகிறான் என்பது பற்றி அறிய தொடர்ந்து அண்ணா சீரியலை பார்க்கவும்.
Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; கடலில் விழுந்த பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!