பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 433ஆவது எபிசோடில் பாண்டியனை தேடி அவரது மகன்கள் செந்தில், கதிர் அவரை கண்டிபிடித்தார்களா? பாண்டியன் வீட்டுக்கு வந்தாரா இல்லையா என்பது பற்றி பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய 432ஆவது எபிசோடில் பாண்டியன் வீட்டை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து கோமதி கதறி அழுத நிலையில், அவரை சாமாதானப்படுத்திய கதிர் - செந்தில் இருவரும் வண்டியை எடுத்துக் கொண்டு செல்வது போன்று காட்டியிருப்பார்கள். இன்றைய 433ஆவது எபிசோடில் பாண்டியனை தேடி கடை, கோயில் என்று எல்லா இடங்களிலும் பழனிவேல், செந்தில், கதிர் என்று எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் அலைந்து தேடுகிறார்கள்.
24
இரவு முழுவதும் தேடி கிடைக்காத பாண்டியன்:
இரவு முழுவதும் தேடியும் பாண்டியன் கிடைக்கவில்லை. கடைசியில் குன்றக்குடி பஸ் ஸ்டாண்டில் பாண்டியன் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை கதிர் பார்த்து விடுகிறார். அதன் பிறகு அவரை தட்டி எழுப்பினால், யார் என்று கேட்கும் மன நிலைக்கு உள்ளாகியிருக்கிறார். இதையடுத்து ஒன்று இல்லை, ஒன்றும் இல்லை என்று சோர்வாக பேசுவதை தொடர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் வாங்கி கொடுத்து, செந்திலுக்கு போன் போட்டு வர சொல்கிறார்.
அங்கு வந்த பழனிவேல், செந்தில், கதிர் மூவரும் பாண்டியனை பத்திரமாக அங்கிருந்து கூட்டிச் செல்கின்றனர். வீட்டிற்கு செல்வதற்குள்ளாக விடிந்துவிட்டது. அங்கு பாண்டியனின் வருகைக்காக அவரது மகன் சரவணன் காத்துக் கொண்டிருக்கிறார். பாண்டியனைப் பார்த்ததும் அழுகிறார். அதோடு இன்றைய 433ஆவது எபிசோடு முடிவடைகிறது.
44
அழுது புலம்பும் கோமதி:
பாண்டியன் திரும்ப வரமாட்டார். அவ்வளவு தான் போனவர் போனது தான் என்று கோமதி அழுது புலம்பிய நிலையில்,. சரவணன் மற்றும் மயில் இருவரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். பாண்டியன் மீண்டும் வீட்டுக்கு வந்தாலும், அவர் பழைய நிலைக்கு திரும்பி அனைவருடனும் சகஜமாக பேசும் மனநிலைக்கு வருவாரா? அரசி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.