இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரியை பார்த்து உன் மகள் திருமணத்தை வெச்சுகிட்டு எங்க போனே... உனக்கு என்ன என்னாச்சு என்று கேட்க, தன்னை சிலர் கடத்தி சென்ற விஷயத்தை செல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
பரமேஸ்வரி பாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சாமுண்டீஸ்வரி
மற்றொருபுறம், பரமேஸ்வரி பாட்டி நான் சென்று சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன். என் பேரனுக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்க அவள் சம்மதிப்பாள் என கூறிவிட்டு, நம்பிக்கையோடு சென்று, என் பேத்தி ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று கூற சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். பின்னர் கோவத்தோடு, இங்கபாருங்க நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்க, அங்கிருந்து பரமேஸ்வரி பாட்டி கவலையோடு திரும்புகிறாள்.
கார்த்திக் மாப்பிள்ளையாக போவது எப்படி?
ரேவதிக்கு கல்யாணம் நடக்கும் ஆனால் மாப்பிள்ளை அவன் கிடையாது. ட்ரைவர் ராஜாவை தான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன் என்று சொல்ல, ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோஷப்படுகிறான். இந்த விஷயம் தெரியாமல் கவலையில் இருக்கும் பரமேஸ்வரி பாட்டியை பார்த்து ராஜ ராஜன் சொல்வாரா? இந்த திருமணத்திற்கு எப்படி கார்த்திக் சம்மதம் சொல்ல போகிறான் என்பதை பற்றி பார்ப்போம்.