பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சக்திவேல் பாண்டியனையும், அவரது குடும்பத்தையும் அசிங்கப்படுத்தவே வீட்டிற்கு வெளியில் வந்து சத்தம் போடுகிறார். கடைசியில் இனிமேல் அரசியிடம் பேச மாட்டேன் பழக மாட்டேன் என்று அவரிடம் சத்தியம் வாங்குகிறார் கோமதி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய 431 ஆவது எபிசோடில் அரசி அவரது அப்பா பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதோடு முடிந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியிலில் இன்றைய 432ஆவது எபிசோடானது முத்துவேல் காட்சியுடன் தொடங்கியது. எடுத்த உடனேயே, குமாரவேலுவை அடிக்கிறார் முத்துவேல். மேலும், வேறு எந்த பொண்ணும் கிடைக்கவில்லையா, எதற்காக பாண்டியன் மகளுடன் பழகி, அவளுடன் சினிமாவுக்கு போற என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே உடனே சக்திவேல் எல்லா பிரச்சனைக்கு பெரியப்பா தான் காரணம் என்று அவன் எப்படி சொல்வான் என கூறுகிறார்.
25
முத்துவேல் மீது பழி போடும் சக்திவேல்
பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்த பெரியப்பா இப்போது வரையில் அதற்கான முயற்சி எடுக்கவில்லை. யாரும் பொண்ணு தரமாட்றாங்க, நம்ம வீட்டு பொண்ணு அந்த வீட்டுக்கு ஓடி போனதால் தான் இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் தான் அந்த வீட்டு பொண்ணையே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிட்டான் போல என்று சக்திவேல் மகனுக்காக பேசுகிறார்.
ஆனால், இது எல்லாவற்றிற்கும் பின்னால் சக்திவேல் தான் இருக்கிறார் என்று உண்மை தெரியாமல் அவரிடமே முத்துவேல் கேட்கும் காட்சி தான் சற்று வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டு முடித்த பிறகு இனிமேல் பாண்டியன் மகளுடன் நீ பேச கூடாது, அந்த வீட்டு எல்லைக்கு போக கூடாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து தனது மகனை அடித்துவிட்டு, பாண்டியன் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வெளியில் வந்த சக்திவேல் பாண்டியன் பற்றியும், அவரது மகளைப் பற்றியும் அவதூறாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் அழுது கொண்டிருக்கும் போது செந்தில் மற்றும் கதிர் இருவரும் சக்திவேலுவிடன் சண்டைக்கு வருகிறார்கள்.
45
அதே தவறை நீயும் செய்யாதே சத்தியம் கேட்கும் காந்திமதி
பின்னாடியே அவர்களை சமாதானப்படுத்த வந்த மீனா மற்றும் ராஜீ இருவரும் அவர்களை அழைத்து செல்கிறார்கள். இதே போன்று மாரி மற்றும் வடிவு இருவரும் வந்து சக்திவேலுவை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்கள். மேலும், குமாரவேலுவிடம் பெண் சாபம் வேண்டாம், அது சும்மா விடாது. ராஜீ ஓடிபோய் கல்யாணம் செய்து கொண்டாள் என்பதற்காக அதே தவறை நீங்கள் செய்ய வேண்டாம். அது நியாயம் இல்லை. அரசியை மறந்துடு. இனிமேல் அவரிடம் பேசவோ, அவரை பார்க்கவோ கூடாது என்று சொல்கிறார்.
இறுதியாக காந்திமதியும் இனிமே அரசியிடம் பேச மாட்டேன் பார்க்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணு என்று கேட்கிறார். அதோடு இன்றைய 432ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளை 433ஆவது எபிசோடில் பாண்டியன் மற்றும் அரசி தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அரசிக்கு கல்யாணம் செய்து வைக்க பாண்டியன் முடிவு கூட செய்யலாம். ஏற்கனவே கடைக்கு வந்து பாண்டியனிடம் அவரது அக்கா வீட்டுக்காரர் அரசியை பெண் கேட்டு சென்றிருந்தார். அதனால், அவரை போனில் அழைத்து திருமண பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு சுகன்யாவும் ஒரு காரணம் என்று மீனாவிற்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.