சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், 'கார்த்திகை தீபம்' சீரியல் தற்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு TRP ரேட்டிங்கில் கெத்து காட்டி வருகிறது. நேற்றைய தினம், இந்த சீரியலின் எபிசோடில் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்குள் நுழைந்த நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி:
கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போட்டு, சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய நிலையில்.... அவரை பத்திரமாக ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டு , நீங்கள் முன்னாடி போங்க. நான் ஒரு முக்கியமான நபரை அழைத்து வருகிறேன் என கூறுகிறார் கார்த்திக். அடித்து பிடித்து திருமண மண்டபத்துக்கு வரும் சாமுண்டீஸ்வரி தன்னை ரவுடிகள் கடத்திய விஷயத்தை வெளியே காட்டி கொள்ளாமல், மகேஷுக்கும் - ரேவதிக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறாள்.
Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!
2 மணிநேரத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்தில் ரேவதி திருமணம்
ஏற்கனவே ஐயர் முகூர்த்த நேரம் முடிந்து விட்டதாக சொன்ன நிலையில், அடுத்த முகூர்த்தம் எப்போது என பார்த்து சொல்லுங்கள் என கூற, அய்யரும் இன்னும் 2 மணி நேரத்தில் நல்ல சுப முகூர்த்தம் இருப்பதாக சொல்கிறார். சாமுண்டீஸ்வரி, அப்பறம் என்ன அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என சொல்கிறாள்.
மல்லிகா டாக்டரை தேடி செல்லும் கார்த்திக்
பின்னர் கார்த்திக் மல்லிகா டாக்டரை, வீட்டுக்கு பார்க்க வர, வீட்டில் இருக்கும் வேலைக்கார பெண் டாக்டர் பெங்களூர் சென்றிருப்பதாக பொய் சொல்கிறார். கார்த்திக் மல்லிகா டாக்டருக்கு போன் செய்ய, டாக்டர் போனை எடுக்காத நிலையில், அங்கிருந்து கிளம்புகிறான். எப்படி இந்த திருமணத்தை நிறுத்த போகிறோம் என்கிற சஞ்சலமும் அவனை வாட்டுகிறது.
மனத்தில் உள்ள எண்ணத்தை கூறிய சாமுண்டீஸ்வரி
கார்த்திக் வீட்டிற்கு வந்த விஷயத்தை, மல்லிகா சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு சொல்கிறாள். உனக்கு நல்ல பையன் டிரைவரா அமைஞ்சிருக்கான் என கூற, சாமுண்டீஸ்வரி அவன் ட்ரைவர் மட்டுமில்ல என் வீட்டு மாப்பிள்ளை என தன்னுடைய மனதில் இருந்த எண்ணத்தை கூறுகிறாள். மல்லிகாவும் தன்னுடைய தோழியை நினைத்து பெருமை கொள்கிறாள். இப்படியான நிலையில், திருமணத்தில் திடீர் என நடக்கும் இந்த ட்விஸ்டை ரேவதி ஏற்று கொள்வாரா? இந்த திருமணம் நடந்து முடிவதற்குள் இன்னும் என்னென்ன பிரச்சனை நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!