- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில், ஆளுக்கு ஒரு பக்கம் திருமணத்தை நிறுத்த போராடி கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அணைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' தொடருக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரின், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தான், கடந்த ஆண்டின் இறுதியில் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டது
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
நேற்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி முருகனிடம், மனம் உருகி வேண்டிய நிலையில்... முருகன் குழந்தை வடிவில் தோன்றி கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என வாக்கு கொடுத்ததை பார்த்தோம். இதை தொடர்ந்து, அடுத்த நாள் காலை விடிந்ததும், அய்யர் மாப்பிள்ளையை கூப்பிட்டு வாங்க என்று சொல்ல, அந்த இடத்தில மகேஷ் வந்து நிற்பதால் பாட்டி அதிர்ச்சியடைகிறார்.
மகேஷுக்கு பதிலாக கடத்தப்பட்ட நவீன்
உடனே பாட்டி நேற்று தானே இவனை கடத்த சொன்னோம், பின்னர் எப்படி இவன் இங்கே என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்ப, மாயா முந்து கொண்டு அதை நான் சொல்றேன்... மகேஷ்க்கு பதிலாக நீங்க கடத்தியது, நவீன் என்கிற உண்மையை அடைகிறாள். அதே போல் எப்படியும் இந்த திருமணத்தை நான் நடத்தியே தீருவேன் என்றும் சவால் விடுகிறாள்.
உண்மையை சொல்ல மறுக்கும் மருத்துவர்
இதனைத்தொடர்ந்து, டாக்டர் ரேவதியிடம் உண்மையை சொல்ல மறுத்து விட்டதால், கார்த்திக் நர்ஸிடம் விஷயத்தை கூறி, அவரை திருமண மண்டபத்திற்கு அழைத்து வருகிறார். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ரவுடிகளை அழைத்து ரகசியமாக தனது திட்டத்தை சொல்கிறாள். இதே நேரத்தில் சிவனாண்டி என்ட்ரி கொடுக்க, வா சிவனாண்டி சரியான நேரத்திற்கு தான் வந்திருக்க என நக்கலாக பேசுவதோடு... என்னோட பொண்ணு திருமணத்துக்கு 50 வகையான டிஷ் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு... மனசார வாழ்த்திட்டு போனு சொல்கிறாள். சிவனாண்டி உனக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருப்பதாகவும் சொல்கிறான்.
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம்; ரேவதிக்கு கார்த்தி கூட்டி வந்த புதிய மாப்பிள்ளை!
ரேவதி கழுத்தில் தாலி கட்டப்போவது யார்:
ரேவதி ஒருபக்கம் பரபரப்பாக திருமணத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி மற்றொருபுறம் நர்ஸை அழைத்து கொண்டு வருகிறான். மகேஷ் மணக்கோலத்தில் இருக்க... ரேவதி கழுத்தில் யார் தாலி காட்டுவார் என்பது தான் தற்போது பரபரப்பின் உச்சம்.