சண்முகத்தை ஏதேனும் ஒரு வழியில் பழி வாங்க துடிக்கும் சௌந்தர பாண்டி, இப்போது தானே வழிய வந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார். இது குறித்து இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஜீ தமிழில், பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் குடும்ப செண்டிமெண்ட் தொடர் 'அண்ணா'. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க, நித்யா ராம் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சண்முகம் காவடி எடுக்க தயாரான நிலையில், இன்று நடக்கபோவது என்ன என்பதை பார்க்கலாம்.
26
முடிவை மாற்றிய பரணி:
பரணியை அமெரிக்கா அனுப்பி வைத்து சண்முகம், குடும்பத்தை பிரிக்க நினைத்த சொந்தரபாண்டி கனவு, இசக்கி கர்ப்பம் ஆனதால், கலைந்து போனது. இசக்கி மிகவும் வீக் ஆக இருக்கிறாள். அவளை கூட இருந்து பாத்துக்க இப்போ எங்க அத்தையும் இல்ல. என்னால அவள அப்படியே விட்டுட்டு போக முடியாது. 3 மாசம் அவ கூடவே இருந்து, அவளோட உடம்பு தேறியதும் நான் வீட்டை விட்டு போய் விடுவேன் என கூறி... மீண்டும் சண்முகத்தின் வீட்டுக்கே வந்துள்ளார்.
இசக்கி குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என சண்முகம் முருகனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இப்போது... சண்முகம் காவடி எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. சௌந்தரபாண்டி, காவடி எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றிவரும் போது, காலில் ஊற்றுவதற்காக வைத்திருக்கும் தண்ணீரில் ஆசிடை கலந்து விட சொல்கிறார். இதனால், சண்முகத்தின் கால் வெந்து போய் அந்த நேர்த்திக்கடன் பாதியில் தடைபடும் என திட்டம் போடுகிறார்.
46
இரண்டாவது காவடி யாருக்கு:
மறுபக்கம் உடன்குடி, இரண்டாவது காவடியும் ரெடியாகி விட்டதாக சொல்ல... முத்துப்பாண்டி இரண்டாவது காவடி யாருக்கு? என கேட்கிறான், கொஞ்ச நேரம் பொறுங்க உங்களுக்கே தெரியும் என சொல்கிறான். சௌந்தரபாண்டி காவடி எடுக்கும் இடத்திற்கு வந்ததும், ரவுடிகளிடம் தண்ணீரில் ஆசிடை சேர்க்குமாறு கண் காட்டுகிறார். பின்னர் இரண்டு காவடி இருப்பதை பார்த்து, இரண்டாவது காவடி யாருக்கு என்று கேட்க சண்முகம் உங்களுக்கு தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறான். நான் எதுக்கு காவடி எடுக்கணும்? அதெல்லாம் எடுக்க முடியாது என்று அடம்பிடிக்கிறார்.
சண்முகம், மாமா ஆக போகும் நானே எடுக்கிறேன், உங்க வீட்டு வாரிசுக்காக நீங்க எடுக்க மாட்டீங்களா என்று மடக்குகிறான். மேலும் சாமியாரை பார்த்து கண் காட்ட, அவர் சாமி வந்து ஆடி நீ அலகு குத்தி காவடி எடுத்து என் எல்லைக்கு வரணும், அப்போது அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது என்று அருள் வாக்கு சொல்ல சௌந்தரபாண்டி என்ன செய்வதென தெரியாமல் முழிக்கிறார்.
66
சிக்கிய சௌந்தரபாண்டி நடக்க போவது என்ன?
அவரை பிடித்து அலகு குத்தி காவடியை தூக்கி கொடுக்கின்றனர், அடுத்து சண்முகம் காவடியை வாங்க தயாராகுகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? ஆசீட் கலந்த நீர் சௌந்தர பாண்டி காலையும் பதம் பார்க்க போகிறதா? என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.