Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' சீரியலில் ரேவதி தன்னுடைய திருமணத்தை நிறுத்திய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 

சாமுண்டீஸ்வரிக்கு மகேஷ் - மாயா இடையே உள்ள உறவு குறித்து தெரிந்ததால், எப்படியும் இந்த திருமணம் நின்று விடும் என்பதால், சிவனாண்டி உதவியுடன் சாமுண்டீஸ்வரியை கடத்த மகேஷ் - மாயா திட்டமிட்ட நிலையில், அதன்படி சாமுண்டீஸ்வரி கடத்த படுகிறாள். 

காரை பின் தொடரும் கார்த்திக்:

சாமுண்டீஸ்வரியை கடத்தி சென்ற கார், எதிரே வந்த கார்த்தியின் கார் மீது மோதியதால் விபத்து ஏற்படுகிறது. கார்த்தி கீழே இறங்கி அந்த ரவுடிகளுடன் வாக்கு வாதம் செய்த போது, சாமுண்டீஸ்வரி வாயை பொத்தி, காரில் கடத்தப்படுவதை அறிந்து கொள்கிறார்ன். பின்னர் கார்த்தி, அந்த காரை பின்தொடர்ந்து சென்ற நிலையில் ஒரு குடோனுக்கு போய் அந்த கார் நிற்கிறது.

Karthigai Deepam: மகேஷ் ஆசையில் போட்ட ரேவதி - கல்யாணத்தில் கடைசி நொடியில் நடந்த ட்விஸ்ட்?


திருமணத்தை நிறுத்திய ரேவதி

பின்னர் கார்த்திக், சாமுண்டீஸ்வரியை கடத்திய ரவுடிகளிடம் சண்டை போட்டு, அவளை காப்பாற்றுகிறான். மறுபக்கம் ரேவதி மணமேடை ஏற்றப்பட்ட நிலையில், மகேஷ் தாலி கட்ட வரும் சமயத்தில் ரேவதி திருமணத்தை நிறுத்துகிறாள். என்னுடைய எல்லா நல்லது -  கெட்டதிலும் என் அம்மா இருந்திருக்காங்க. என்னுடைய கல்யாணத்தில் அவங்க இல்லாமல் எப்படி? அம்மா ஆசீர்வாதத்துடன் மட்டுமே என் திருமணம் நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

சமாதான முயற்சி பலனில்லை

சந்திரகலா ஒரு பக்கம் மாயா ஒரு பக்கம் மகேஷ் ஒரு பக்கம் என ஆளாளுக்கு ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் முடியாமல் போகிறது. அய்யரும் நல்ல நேரம் முடிந்து விட்டதாக சொல்கிறார். இதனால் மாயா, மகேஷ், மற்றும் சந்திரகலா அதிர்ச்சியடைகிறார்கள். 

Karthigai Deepam: விபத்தில் சிக்கிய கார்த்திக்; சாமுண்டீஸ்வரியை கண்டுபிடிப்பான? கார்த்திகை தீபம் அப்டேட்!

திருமண மண்டபத்தின் உள்ளே என்ட்ரி கொடுக்கும் சாமுண்டீஸ்வரி

சாமுண்டீஸ்வரி திருமண நேரத்தில் எங்கு போனார் என, அங்கிருந்த அனைவரும் பொலம்பிக்கொண்டிருக்க, அதிரடியாக கார்த்திக்குடன் திருமண மண்டபத்தின் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்து அவளை கடத்தி காரியம் சாதிக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க... இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

Latest Videos

click me!