- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: விபத்தில் சிக்கிய கார்த்திக்; சாமுண்டீஸ்வரியை கண்டுபிடிப்பான? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: விபத்தில் சிக்கிய கார்த்திக்; சாமுண்டீஸ்வரியை கண்டுபிடிப்பான? கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

karthigai deepam
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், ஜீ தமிழில் தற்போது டாப் 10 TRP லிஸ்டில் இணைந்துள்ள சீரியல் தான் 'கார்த்திகை தீபம்' இந்த தொடரின், நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு வந்த சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டமிட்ட நிலையில் இன்றைய பரபரப்பான எபிசோட் குறித்து பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரியை கடத்திய சிவனாண்டி
சாமுண்டீஸ்வரி மகளின் வாழ்க்கை அழிய வேண்டும், அவளை பழிக்கு பழி வாங்க வேண்டும் என துடிக்கும் சிவனாண்டி, சந்திரகலாவை வைத்து சாமுண்டீஸ்வரி கவனத்தை திசை திருப்பி மூக்கில் குளோரோஃபாம் வைத்து மயங்கம் போடவைத்து மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கிறான்.
பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!
உண்மையை மறைக்கும் சந்திரகலா
சாமுண்டீஸ்வரி கடத்தப்பட்ட விஷயம் எதுவும் தெரியாமல் திருமண ஏற்பாடு ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வருகிறது. சாமுண்டீஸ்வரி எங்கே.. காணும் என அனைவரும் கேட்க துவங்கும் நிலையில், சந்திரகலா அக்கா வந்துடுவாங்க, என ஏதேதோ கூறி கல்யாணத்தை நடத்த திட்டம் போடுகிறாள்.
பரபரப்பான காட்சிகளுடன் கார்த்திகை தீபம்
ராஜேஸ்வரிக்கும் கடைசி நிமிடத்துல சாமுண்டீஸ்வரி எங்கே போனா என்ற சந்தேகம் எழுகிறது. அதற்க்கு சந்திரகலா அக்கா கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். சாமுண்டீஸ்வரி இல்லாமல் திருமணம் நடந்தேறுமா? என பரபரப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சாமுண்டீஸ்வரியை கடத்தி கொண்டு செல்லும் வேன் கார்த்திக் நர்ஸை அழைத்துக்கொண்டு வரும் கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
கார்த்திக் கண்டு பிடிப்பானா?
கார்த்திக் ரவுடிகளுடன் வாக்குவாதத்தில் ஏற்பட, உள்ளே மயங்கிய நிலையில் இருக்கும் சாமுண்டீஸ்வரியை கண்டு பிடிப்பானா? இந்த திருமணம் முருகன் சொன்னபடி கார்த்தியோடு எப்படி நடக்கப்போகிறது என்பதை அறிய காத்திருப்போம்.