ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'இதயம்' தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை ஜனனி அசோக்குமார் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்கும் புதிய நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் இறக்கும், கணவனின் இதயம் ஹீரோ ஆதிக்கு (ரிச்சர்ட்) பொருத்தப்படும் நிலையில்... அவர் தன்னை அறியாமல் விபத்தில் உயிரிழந்த பாரதியை (ஜனனி அசோக்குமார்) காதலிக்க துவங்குகிறார். ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதால், ஹீரோவின் வீட்டில் பாரதியை திருமணம் செய்ய பல பிரச்சனைகள் வருகிறது. அவை அனைத்தையும் தாண்டி, ஆதியை (ரிச்சர்ட்) திருமணம் செய்கிறார்.
24
பாரதி சீரியல் மூலம் ஜனனிக்கு கிடைத்த மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம்:
ஒரு கட்டத்தில், ஆதிக்கு தான் தன்னுடைய கணவரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது என பாரதிக்கு தெரியவர, இவர்களின் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்படுகிறது. பாரதி மனம் திருந்திய நிலையால், பின்னர் பிரிந்திருந்த ஆதியும் - பாரதியும் ஒன்று சேர்கிறார்கள். எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமாருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், வரும் திங்கள் முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சமயத்தில் இரண்டாம் பாகத்தில் பாரதியாக ஜனனி அசோக் குமார் தொடரப்போவதில்லை என்பதை அவரே அறிவித்துளளார் . ஆமாம் தனது அடுத்தகட்ட பயணத்திற்காக இதயம் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும் தன்னை பாரதியாக ஏற்று கொண்டவர்களுக்கும், தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த சேனலுக்கும் அவர் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
44
புதிய ஜனனி யார்
இதனால் இதயம் சீரியலில் பாரதியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது, தெலுங்கில் பிரபல சீரியல் ஒன்றில் ரிச்சர்ட்டுடன் இணைந்து நடித்துள்ள பல்லவி கௌடா என்ற நடிகை தான் இதயம் சீரியலில் மீண்டும் ரிச்சர்ட்டுடன் ஜோடி சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிச்சர்டுடன் பல்லவி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.