Karthigai Deepam: மகேஷ் ஆசையில் போட்ட ரேவதி - கல்யாணத்தில் கடைசி நொடியில் நடந்த ட்விஸ்ட்?
கார்த்திகை தீபம் சீரியலில், எப்படியும் மகேஷுக்கு ரேவதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கும்பல் காத்திருக்க, இன்னொரு கும்மல் தடுத்து நிறுத்த போராடி வருகிறது. இப்படியான நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

ஜீ தமிழில் தற்போது TRP-யில் பட்டையை கிளப்பி வரும் சீரியலான 'கார்த்திகை தீபம்' தொடரில் ரேவதியின் திருமணம் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ரேவதியின் திருமணம் நடக்குமா? நடக்காதா? கார்த்தியை எப்படி கைப்பிடிக்க போகிறார் என... எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வாகையில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரியை ரவுடிகள் கடத்தி சென்ற வேன், நர்ஸை அழைத்து கொண்டு மண்டபம் நோக்கி வந்துகொண்டிருந்த கார்த்தியின் கார் மீது மொத்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கும் சமுடீஸ்வரியை கடத்தி வரும் கார்
அந்த ரவுடிகள் அவசர அவசரமாக சாமுண்டீஸ்வரியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், கார்த்திக் காரில் இருந்து கீழே இறங்கி ரவுடிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட, அந்த ரவுடிகளும், மன்னிப்பு கேட்கிறார்கள். பின்னர் அந்த காரில் இருக்கும் சாமுண்டீஸ்வரியை கார்த்திக் பார்ப்பானா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார் அங்கிருந்து செல்லும் போது கார்த்திக் பின்புறத்தில் சாமுண்டீஸ்வரிவை வாயை பொத்தி கடத்தி செல்வதை கவனிக்கிறான்.

திருமணத்தை நடத்த திட்டம் போடும் சந்திரகலா
இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக், அந்த காரை பின்தொடர முடிவு செய்கிறான். மறுபக்கம் ரேவதி, மகேஷை மணமேடையில் உட்கார வைத்து ப்ரோகிதர் மந்திரங்கள் செல்ல, மாயா எல்லாருக்கும் அட்சதை கொடுக்கிறாள். சந்திரகலா, எப்படியாவது சாமுண்டீஸ்வரி வந்து இந்த திருமணத்தை நடத்த திட்டம் போடுகிறாள்.

சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுவானா கார்த்திக்
தாலி கட்ட போகும் சமயத்தில் ரேவதி முடியாது.. அம்மா இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என மணமேடையை விட்டு எழ விடுகிறாள். இதனால் மாயா, சந்திரகலா இருவரும் என்ன செய்வது என தெரியாமல் உரைந்து போய் நிக்கிறார்கள். சிவனாண்டி நல்லவன் போல் சரி வெயிட் பண்ணி பார்ப்போம் என சொல்ல, கோவிலுக்கு சென்றதாக கூறப்பட்ட சாமுண்டீஸ்வரிக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
பாட்டிக்கே ஷாக் கொடுத்த மகேஷ்; கார்த்திக் முயற்சியால் உண்மை வெளிவருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!

குடோனுக்கு வந்து சேரும் கார்த்திக்
ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை ஒரு குடோனுக்கு அழைத்து வந்து, கட்டி போடுகிறார்கள், கார்த்திக்கும் அந்த வேனை பின்தொடர்ந்து ஒருவழியாக குடோனுக்கு வந்து சேர்கிறான். இப்படியான நிலையில், கார்த்திக் அந்த ரவுடிகளிடம் இருந்து சாமுண்டீஸ்வரியை மீட்டு, மண்டபத்திற்கு அழைத்து வருவானா? திருமணம் யாருடன் நடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.