பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 430ஆவது எபிசோடில், மயங்கி விழுந்த பாண்டியன் கண் விழித்து பார்த்த பிறகும் கூட அமைதியாகவே இருந்தார். ஆனால், கோமதி அப்படியில்லை. கோபத்தில் உச்சத்திற்கு சென்று அரசியை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்ததோடு அவரை வெளுத்து வாங்கியுள்ளார். கொஞ்சம் நஞ்சமல்ல, சும்மா சொல்லக் கூடாது. அடிக்கும் காட்சியை நன்றாகவே எடுத்திருக்கிறார் இயக்குநர்.
குமுதா என்கிற பெயரில் சேவ் பண்ணி வைக்கப்பட்ட குமரன் பெயர்
ஏற்கனவே அரசி மீது இருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்ட நிலையில்... அப்போ அடிக்கடி அவன் கிட்ட தான் போன்ல பேசி கிட்டு இருந்தியா? அதெல்லாம் இப்போது தான் தெரிகிறது என்று சொல்லி சொல்லி அடிச்சு துவைத்துள்ளார். பலர் அவரை தடுத்த போதும் கோமதியின் கோவம் மட்டும் அடங்கவில்லை. அதன் பிறகு அரசியின் மொபைல் போனை எடுத்து செக் பண்ணி பார்க்க சொல்கிறார். சரவணனும் போனை எடுத்து, பேட்டர்ன் போட்டு செக் பண்ணி பார்க்கிறார். குமுதா என்ற பெயரில் குமாரவேலுவின் பெயரை சேவ் செய்து வைத்திருந்ததை சரவணன் கண்டுபிடித்துள்ளார்.
அரசியின் காதலை போட்டு உடைத்த சரவணன்; மயங்கிய பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
அடி வெளுத்து வாங்கிய கோமதி:
மேலும், காலேஜ் பேக்கில் இருந்த ஹார்டின் கார்டு, சாக்லேட்ஸ் என்று எல்லாவற்றையும் எடுத்தாச்சு. கொஞ்ச நாளாக பேசி பழகுகிறேன் என்று சொல்லியும் விடுவதாக இல்லை. 24 மணி நேரமும் அவன்கூட தான் பேசிக் கொண்டிருந்திருப்பாள். இப்படி எல்லாமே கண்டுபிடித்த கோமதி தன்னுடைய ரூமிற்கு சென்று அங்கு பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் கீழே போட்டு அரசியின் உடைகளை சோதனை செய்து பார்க்கும் போது தான் குமரவேல் வாங்கி கொடுத்த பல பொருட்கள் கிடைக்கிறது.
பீரோவில் கிடைத்த பரிசு பொருட்கள்:
டிரெஸ், கொலுசு, புருஷன் பொண்டாட்டி மாதிரி எடுத்து கொண்ட போட்டோபிரேம், கீரீட்டிங் கார்டு என்று எல்லாவறையும் தேடி பிடித்து எடுத்து வந்து அரசியை மீண்டும் திட்டி தீர்க்கிறார். மேலும் சினிமாவிற்கு மட்டும் தான் போனீயா இல்லை வேறெங்கும் போனீயா என்று கேட்கும் போது கையெடுத்து கும்பிடுகிறார் அரசி. அப்போது அவரது கையிலிருந்த மோதிரத்தை கோமதி கண்டுபிடித்துவிட்டார். ஓ நீங்கள் ரெண்டு பெரும் நிச்சயம் செஞ்சிக்கிட்டிங்களா? இல்லை திருமணமே செய்து விட்டீர்களா என்று கேட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார்.
Pandian Stores 2: காசு விஷயத்தில் செந்தில் மீது சந்தேகப்படும் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
நாளைய தினம் சுகன்யா வாய் திறப்பாரா?
பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது என்று சொல்லி சொல்லி அடிக்கிறார். இனிமேல் உங்க அப்பாவல் ரோட்டில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? நீ நல்லாவே இருக்க மாட்டா என்றெல்லாம் சாபம் விடுகிறார். அதோடு இன்றைய 430ஆவது எபிசோடு முடிவடைகிறது. நாளையும் இந்த காட்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், பாண்டியன் பேசுவது போன்ற காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது. இப்போது வரையில் அமைதியாக இருக்கும் சுகன்யா நாளைய எபிசோடில் அரசிக்காக பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். அவர் கதிர் மற்றும் ராஜீயின் காதல் கதையை உதாரணமாக சொல்லலாம் என்று தெரிகிறது.