பாரதி கண்ணம்மா சீரியலில், நடித்த வினுஷா தேவி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மீண்டும் விஜய் டிவியில் நடித்து வரும் சீரியல் தான் 'பனிவிழும் மலர்வனம்'. இவருக்கு ஜோடியாக சித்தார்த் குமரன் நடித்தார். மேலும் ஷில்பா, ஃபெரோஸ்கான், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
25
சேரன் - அனுப்பமா திருமணம்:
சூழ்நிலை காரணமாக, ஒரே கல்லூரியில் படிக்கும் கதிரின் (சித்தார்த்) தங்கை அனுபமாவும் அன்பிற்கினியால் (வினுஷா தேவி) தம்பி சேரனும் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. அனுப்பமாவுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்த போது, இந்த திருமணம் நடப்பதால், சேரனை பழிவாங்கும் விதமாக அன்பிற்கினியாலின் திருமணத்திற்கு செல்லும் கதிர் அன்பு கழுத்தில் தாலி கட்டி அவளை தன் மனைவி ஆக்குகிறார்.
இதனால் அன்பு, கதிர் மற்றும் அவருடைய அம்மாவை பழி வாங்கும் விதமாக கதிர் வீட்டுக்கே வரும் நிலையில், மெல்ல மெல்ல கதிர் மீது காதல் வருகிறது. ஆனால் அன்புவை வெளியே அனுப்ப ஒரு கும்பல் வீட்டுக்குள்ளேயே சதி திட்டம் போட, தற்போது அன்பு மீண்டும் அவருடைய அப்பா வீட்டுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. அன்பு தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக தாத்தா நினைக்கிறார்.
45
அன்புவை புரிந்து கொள்வார்களா?
அன்புவை தாத்தாவும், கதிரும் புரிந்து கொள்வார்களா? கதிர் மீண்டும் அன்புவுடன் சேர்வாரா? என்கிற கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் ஒருவருடத்திற்கு முன்பே முடிவுக்கு வர உள்ளது... இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
55
முடிவுக்கு வரும் பனிவிழும் மலர்வனம்:
டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரியலை பிரான்சிஸ் கதிரவன் என்பவர் இயக்கி வர, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகும் நிலையில், 'பனிவிழும் மலர்வனம்' ஒரு வருடத்திற்கு முன்பே முடிவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.