- Home
- Cinema
- Pandian Stores: சண்டை போட்ட பழனி; குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
Pandian Stores: சண்டை போட்ட பழனி; குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய 430 ஆவது எபிசோடில், கோமதி மகளுக்கு சாபம் விடும் காட்சியோடு முடிந்த நிலையில், இன்று 431ஆவது எபிசோட் அதே சீனுடன் தொடங்கி உள்ளது. இதுபற்றி பார்ப்போம்.

பாண்டியனிடம் சென்ற கோமதி, அழுது கொண்டே அவளைப் பற்றி ஏற்கனவே நான் சொன்னேன். அவள், தப்பு செய்யிறானு... உங்களிடம் படிச்சு படிச்சு நான் சொன்னேன். நீங்கள் யாருமே கேட்கவில்லை. இப்போ எவ்வளவு பெரிய தப்பு செஞ்சிட்டு வந்துருக்கா தெரியுமா? என்று ஆதங்கத்தோடு கோமதி அழுகிறார்.
ஆதங்கத்தை கொட்டும் கோமதி
பின்னர் அரசியிடம், நீ ஒரு கூலி வேலை பாக்குறவனை காதலிச்சு இருந்தால் கூட, நான் ஒன்றும் சொல்லிருக்க மாட்டேன். ஆனால், அவனை போய் எப்படி காதலிச்ச என்று கோமதி தீயாக மாறி கொந்தளிக்கிறார். கதிர் பிறந்த போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. அப்போது ஒரு வாரம் நான் படுத்தபடுக்கையாக இருந்தேன். எல்லோரும் நான் இறந்துவிடுவேன்னு சொன்னாங்க. ஆனால், இவர் தான் என்னை போராடி 1000 டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காப்பாத்துனாரு. அப்பவே நான் போய் சேர்ந்திருந்தால் நீ பிறந்திருக்கவே மாட்ட, வயிற்றில் அடித்து கொண்டு அழுகிறார்.
Pandian Stores Update: அரசியின் மொபைலை செக் பண்ணிய சரவணன்; பீரோவில் கோமதிக்கு காத்திருந்த அதிர்ச்சி?
அதிர்ச்சியில் முத்துவேல் குடும்பம்:
இதையடுத்து ஆத்திரமடைந்த பழனிவேல், குமாரவேலுவிடம் கேட்க போகிறேன் என்று புறப்பட சுகன்யா அவரை தடுத்து நிறுத்தினார். ஆனாலும், அண்ணன் வீட்டிற்கு வந்த பழனிவேல் சண்டை குமரவேலிடம் சண்டை போடுகிறார். இந்த விஷயம் பழனி மூலம் அங்கிருப்பவர்களுக்கு தெரியவர இதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.
குமரவேலுக்கு விழுந்த தர்ம அடி
அப்போது அங்கு வந்த கதிர் மற்றும் செந்தில் இருவரும் குமாரவேலுவை அடி வெளுத்துள்ளனர். உடனே தனது மகனை விட்டுக் கொடுக்காமல் சக்திவேல் பேசினார். என்னுடைய சொத்துக்கு ஒரே வாரிசு. அவனை வளைத்து போட நீங்கள் பிளான் போடுறீங்களா என்றெல்லாம் வாயிக்கு வந்ததை பேசுகிறார். கடைசியில் முத்துவேல் மனைவி நீங்கள், போங்க, நான் குமாரனை கண்டித்து வைக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார். ஆனால், இதையல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
அரசியின் காதலை போட்டு உடைத்த சரவணன்; மயங்கிய பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
கலங்கி அழும் பாண்டியன்
இதையடுத்து பாண்டியனிடம் சென்ற அரசி அப்பா என்னை மன்னிச்சிடுங்க. உங்க முகத்தை பார்க்க கூட எனக்கு தகுதி இல்லை என்று அழுது புலம்புகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 431ஆவது எபிசோடு முடிவடைந்துள்ளது. இனி, நாளைய எபிசோடில் பாண்டியன் தொடர்பான டயலாக் இருக்கும் என்று இருக்குமா? குமரவேல் காதலுக்கு முத்துவேல் என்ன சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.