Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Mar 20, 2025, 02:26 PM ISTUpdated : Mar 20, 2025, 02:30 PM IST

'கார்த்திகை தீபம்' சீரியலின் 2-ஆம் பாகம் தற்போது பரபரப்பில் உச்சத்தில், அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தோடு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.  

PREV
15
Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!

நேற்றைய எபிசோடில், ரவுடிகளிடம் இருந்து கார்த்திக்கின் உதவியோடு  சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வந்த நிலையில், அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்கிறாள். சாமுண்டீஸ்வரியை பார்த்த மாயா - மகேஷ் இருவரும், இந்த கல்யாணம் நடக்குமா? என்கிற குழப்பத்தில் இருக்க இன்று, அருண் - ஆனந்த் ஆகியோரால் கடத்தப்பட்ட, நவீனும் எப்படியோ தப்பித்து மண்டபத்திற்கு வருகிறான்.

25
கார்த்தியின் எண்ணம் சுக்குநூறாக உடைகிறது

கார்த்திக் நவீனை மாப்பிள்ளையாக அமரவைத்து ரேவதியின் திருமணத்தை முடித்து விட பிளான் போடும் நிலையில், நவீன் சொன்ன வார்த்தையால் கார்த்தியின் எண்ணம் சுக்குநூறாக உடைகிறது. 

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவால் ரேவதி திருமணத்தில் நடக்கும் ட்விஸ்ட்! கார்த்திகை தீபம் அப்டேட்

35
உண்மையை தயங்கியபடி சொன்ன கார்த்திக்

மண்டபத்திற்கு வந்த நவீன், துர்காவை தான், நான் ரேவதி என நினைத்தேன். எனக்கு அவளை தான் பிடித்திருக்கிறது என ஷாக் கொடுக்கிறான். சரி திருமணத்தையாவது நிறுத்தி விடலாம் என கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல முடிவு செய்து, சாமுண்டீஸ்வரியை சந்தித்து மகேஷ் பற்றிய உண்மையை தயங்கியபடியே சொல்கிறான்.

45
மகேஷ் தான் மாப்பிள்ளை:

அதற்குள் மாயா.. ரேவதியிடம் சென்று அந்த ட்ரைவர் தன்னை பற்றியும் மகேஷ் பற்றியும் தவறாக சொல்லி இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் போடுவதாக சொல்லிய நிலையில், சாமுண்டீஸ்வரியிடம் கார்த்தி பேசுவதை கேட்ட ரேவதி உச்சக்கட்ட கோவத்தில் இருக்கிறாள்.  சாமுண்டீஸ்வரியும் உனக்கு எங்க குடும்பத்து மேல, அக்கறை இருக்கு தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மகேஷ் தான் மாப்பிள்ளை, அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை இப்படியே விட்டுடு என்று சொல்ல, ரேவதி நிம்மதியடைய கார்த்திக் ஏமாற்றம் அடைகிறான். 

Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!

55
கார்த்திக்கை தவறாக புரிந்து கொண்ட ரேவதி:

ரேவதியின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறான். இதனை தொடர்ந்து மாயா மீண்டும் ரேவதியை சந்தித்து ட்ரைவர் பற்றி தப்பு தப்பாக சொல்லி ஏற்றி விடுகிறாள். மறுபக்கம் ராஜேஸ்வரி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என்னாச்சு எங்க போய் இருந்த என்று கேட்க தான் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்கிறாள். இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories