- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
Pandian Stores 2 Today Episode : அஞ்சலி பற்றி கேட்ட மீனா... ஆடிப்போன சரவணன் - இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அஞ்சலி உடன் கோவிலில் சரவணன் பேசியதைப் பார்த்த மீனா, அதைப்பற்றி அவரிடமே கேட்டுள்ளார். இதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், வழக்கம்போல் கோமதி பாண்டியனை வம்பிழுக்கிறார். வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் சென்று உங்களுக்கு காஃபி வேணுமா என கேட்கும் கோமதி, அவர்கள் வேண்டாம் என சொன்னாலும் வாண்டடாக கொடுத்துவிட்டுச் செல்கிறார். ஆனால் காஃபிக்காக காத்திருக்கும் பாண்டியனிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் இருக்கிறார் கோமதி. இதனால் பாண்டியன் பயங்கர கடுப்பில் இருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனிவேல் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் என்னடா அண்ணன் வீட்டுல எதாச்சும் விசேஷமா என கோமதி விசாரிக்கிறார்.
அப்செட் ஆன அரசி
என்ன அக்கா எப்ப பார்த்தாலும் அண்ணன் வீட்டுலயே ஒரு கண்ணு விச்சிட்டு இருக்கியா என கேட்கிறார். இல்லடா நிறைய பேர் வந்தாங்க அதான் கேட்டேன் என சொல்கிறார் கோமதி. உடனே பழனிவேல், குமரவேலுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் விஷயத்தை பற்றி கூறுகிறார். அதைக்கேட்ட அரசி ஷாக் ஆகிறார். அவரின் முகமே வாடிப்போகிறது. இதையெல்லாம் பழனிவேல் நோட் பண்ணுகிறார். பின்னர் அரசி எழுந்து உள்ளே செல்கிறார். மறுபுறம் குமரவேல் வீட்டில் அவரின் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நின்றுபோன குமரவேல் நிச்சயதார்த்தம்
அந்த நேரம் பார்த்து பெண் வீட்டில் இருந்து ஒரு நபர் வந்து இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என சொல்கிறார். அவரிடம் என்னங்க ஆச்சு என வேல் பிரதர்ஸ் கேட்க, அதற்கு அந்த நபர், நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க, உங்க தம்பிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்க, அதனால எங்க பொண்ணை உங்க பையனுக்கு தரமாட்டோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இந்த விஷயம் தான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என சொல்லிப்பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணுவீட்டில் இருந்த வந்தவர், அதெல்லாம் முடியவே முடியாது என ஒரேபோடாக போடுகிறார்.
அரசிக்கு குட் நியூஸ் சொன்ன பழனி
நிச்சயதார்த்தம் நின்றதை அடுத்து மறுபடியும் பாண்டியன் வீட்டுக்கு செல்லும் பழனி, குமரவேலுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது என கூறுகிறார். இதைக்கேட்டதும் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார் அரசி. இதை நோட் பண்ணும் பழனி, அரசியிடமே ஓப்பனாக கேட்கிறார். உனக்கு குமரவேல் மீது இஷ்டமா என கேட்க, அதற்கு ஒழுங்கா பதில் சொல்லாமல் ரூமுக்குள் சென்றுவிடுகிறார் அரசி. இதையடுத்து சரவணன் கடைக்கு கிளம்புவதற்காக வண்டியை எடுக்க, அந்த நேரம் பார்த்து மீனா வீட்டுக்கு வருகிறார். அவர் வாசலில் நிற்கும் சரவணனை அழைத்து பேசுகிறார்.
சரவணனிடம் விசாரித்த மீனா
கோவிலில் உங்களை ஒரு பொண்ணோட பார்த்தேன். யார் அது என கேட்கிறார். அவ என்னோட பழைய ஃபிரெண்டு, அதனால தான் பார்த்து பேசிக்கிட்டு இருந்தோம் என கூறுகிறார் சரவணன். அவகிட்ட என்னோட சோகக் கதையை சொல்லிகிட்டு இருந்தேன். அவ்வளவுதான் என சரவணன் சொல்ல, உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே வேற எதுவும் இல்லதான என மீனா கேட்கிறார். அப்படியெல்லாம் எதுவும் இல்ல, அதான் ஏற்கனவே என்னோட வாழ்க்கை முடிஞ்சு போச்சுல்ல என சொல்லுகிறார். அதுமட்டுமின்றி நான் எனக்காக இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக் கூடாதா என ஒரு பிட்டையும் போடுகிறார் சரவணன். இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

