நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தை பிரிப்பதிலேயே குறியாக இருக்கும் சௌந்தரபாண்டி, தன்னுடைய மகள் பரணியை சென்னைக்கு அழைத்து சென்று அப்படியே யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார். ஆனால் பரணியை வைத்து தான் இன்று பிரச்சனையே துவங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.
சௌந்தரபாண்டிக்கு வந்த அச்சம்
ஆனால் சண்முகம் இப்படி சொல்வதால், சௌந்தரபாண்டியின் திட்டம் பலிக்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தில், நான் தான் பரணியை சென்னைக்கு கூட்டிட்டு போவேன் என சொல்லி அடம்பிடிக்க, பாக்கியமும் நீங்க எதுக்கு போறீங்க? சண்முகம் போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். ஆனால் சௌந்திரபாண்டி அதெல்லாம் முடியாது, என் மகளை நான் தான் கூட்டி போவேன் என சொல்ல, சண்முகமும் தன்னுடைய பங்கிற்கு அவள் என் பொண்டாட்டி. அவளை கூட்டிட்டு போக நான் இருக்கேன் என சொல்ல.. இதை வைத்தே சண்முகம் மற்றும் சௌந்தரபாண்டி இடையே மோதல் வெடிக்கிறது.