ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் கதம்பம் போல்... வெவ்வேறு ஜானரில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கிராமத்து சாரல் வீசும் வகையில் ஓடிக்கொண்டிருக்கும் 'அண்ணா' சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியலின், நேற்றைய எபிசோடில், பரணியை விசா பிராசசுக்கு யார் அழைத்து செல்வது என சௌந்தர பாண்டி மற்றும் சண்முகம் இடையே வந்த மோதலை பார்த்து, கடுப்பான பரணி நீங்கள் யாரும் என் கூட வரவேண்டாம் நானே செல்கிறேன் என சொல்லிவிட்டு தனியாக சென்னைக்கு செல்கிறாள்.
வைகுண்டம் சொன்ன வார்த்தை:
இதை தொடர்ந்து வைகுண்டபமும், 'நீ அவளை தேடி அங்க வருவ அப்படிங்கிற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என சொல்ல அப்போது தான் சண்முகத்துக்கு தன்னுடைய தவறு தெரியவருகிறது. பரணி அமெரிக்கா போறேன்னு சொல்லும் போது கூட, நான் தான் அவனுக்கு ஆதரவா இருந்துருக்கும் என பழைய விஷயங்களை நினைத்து கவலை படுகிறான்.
அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்த சண்முகம்
தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்கிறான். அங்கு நிறைய பேர் இருப்பதால் நாளைக்கு கூட வந்து இதை பார்த்துக்கொள்ளலாம் வா என அவளை கூப்பிடும் அவன், நீ சாப்பிட்டியா என பரணியை பார்த்து கேட்க, அவள் இல்லை என சொன்னதும், அங்கிருக்கும் மற்றவர்களும் சாப்பிட வாய்ப்பில்லை என நினைத்து, அங்கிருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கி கொடுக்கிறான். சண்முகத்தின் செயல் அங்கு இருப்பவர்களையும் கவர்கிறது. எனவே எங்கிருப்பவர்கள் அவனுக்கு சப்போர்ட் செய்து பேச, பரணி இவனை பத்தி தெரியாது என சொல்கிறாள்.
கடலில் விழுந்த பரணி:
அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும், இருவரும் அப்படியே சென்னை பீச்சுக்கு செல்கின்றனர். அங்கு சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். பிறகு பரணி பீச்சில் கால் நனைக்க பெரிய அலை அவளை கீழே தள்ள சண்முகம் அவளுக்கு என்னாச்சு என அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.