Anna Serial: சௌந்தரபாண்டி சொன்ன விஷயம்; சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Mar 24, 2025, 03:20 PM ISTUpdated : Mar 24, 2025, 03:26 PM IST

திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை வாரம் தோறும், 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், இன்று என்ன நடக்க போகிறது? என்பது பற்றி பார்க்கலாம்.  

PREV
15
Anna Serial: சௌந்தரபாண்டி சொன்ன விஷயம்; சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் அப்டேட்!

குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக, ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், சண்முகம் - பரணி பீச்சுக்கு செல்ல, கடலில் எழும் பெரிய அலையால் பரணி கீழே விழ நேர்கிறது. இதை தொடர்ந்து இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

25
பிரச்சனையை மறக்கும் பரணி

பரணி கீழே விழுந்ததும், சண்முகம் அவளுக்கு என்னாச்சு என்று பதறியடித்து கொண்டு ஓடி போய் அவளை தூங்குகிறான். இதையடுத்து இருவரும் கடலில் ஓடி பிடித்து விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதன் மூலம் பரணியும் சண்முகத்துடன் இருந்த பிரச்னையை மறக்கிறாள்.

Karthigai Deepam: கார்த்திக் மீது விழுந்த பழி; பிளேட்டை மாற்றிய சாமுண்டேஸ்வரி! கார்த்திகை தீபம் அப்டேட்!

35
பரணியை கர்ப்பமாக நினைக்கிறாரா சண்முகம்?

அதன் பிறகு, இருவரும் ரிசார்ட்டில் தங்க முடிவு செய்த நிலையில், பரணி தூங்கியதை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கிறான் சண்முகம். சண்முகம் நான் இங்க வந்ததே, உன்னோட சநதோஷமாக இருக்க தான். நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்து நீ கர்ப்பமாகி விட்டால், அமெரிக்கா போகாமல் என்னுடனே இருந்து விடுவாய் என சண்முகம் சொல்ல, சௌந்தரபாண்டி துக்கத்தில் இருந்து அலறியபடி எழுந்து அமர்கிறார்.

45
கணவனால் குழம்பி போன சௌந்தரபாண்டி:

பின்னரே இது அவருக்கு வந்த கனவு என்பது நமக்கு தெரியவருகிறது. அய்யய்யோ இந்த கனவு ஒருவேளை நிஜமாகி விட்டது என்றால் என்ன செய்வது, என உடனடியாக பரணிக்கு போன் செய்து,நீ  எங்க இருக்க என்று விசாரிக்க, அவள் ஹோட்டலில் இருப்பதாகவும் சண்முகம் வெளியே சென்றிருப்பதாகவும் சொல்கிறாள். 

பின்னர் சௌந்தரபாண்டி அவன் அங்க வந்ததே உன்னை கர்ப்பமாக்க தான்.. அப்படி நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக முடியாது என்று சொல்ல பரணி சண்முகம் இப்படி ஒரு பிளானில் தான் இங்கு வந்தானா என ஆத்திரப்படுகிறாள். ஆனால் சௌந்தர பாண்டி இது தன்னுடைய கனவு என சொல்லாமல் மறைக்கும் நிலையில், வழக்கமாக வருவது போல் சண்முகம் மல்லிகை பூவுடன் வர பரணி அவனிடம் கோபப்படுகிறாள். 

55
சண்முகத்தை ஊருக்கு துரத்தும் பரணி

இங்க பாரு நீ அதுக்காக தானே வந்திருக்க... எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு என ஆவேசப்பட சண்முகம் அவள் எதை பற்றி பேசுகிறாள் என புரியாமல் நிற்கிறான். தனியா இங்க வந்த எனக்கு தனியாவே ஊருக்கு வர தெரியும்.. நீ மொதல்ல கிளம்பு என சொல்ல, சண்முகமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்கிறான்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்; இருவரும் செய்த ஆச்சர்யத்தக்க செயல்!

இப்படியான நிலையில், அடுத்து என்ன நடக்கும். சண்முகம் பற்றி பரணி புரிந்து கொள்வாரா? அல்லது பரணி அமெரிக்கா செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories