ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து கோரி மனு தாக்கல்; இருவரும் செய்த ஆச்சர்யத்தக்க செயல்!
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இப்போது விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சினிமா பிரபலங்களின் விவாகரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ், ரவி மோகன், ஏ ஆர் ரஹ்மான் ஆகிய பிரபலங்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதிகரித்து வரும் விவாகரத்து:
சினிமா பிரபலங்களுக்கு போட்டியாக, கிரிக்கெட் வீரர்களுடன் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவிப்பதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு, ஹர்திக் பாண்டியா, நடாஷாவுடன் விவகாரத்தை அறிவித்த நிலையில், இப்போது கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்தை அறிவித்தனர்.
"என் இயக்குனரோடு ஒரு செல்ஃபி" NEEK பட சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்!
விவாகரத்து செய்தியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்:
இதுபோன்ற விவாகரத்து செய்திகளால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வரும் நிலையில், இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜிவி - சைந்தவி ஜோடி தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளனர் (Sainthavi divorce case) . கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தனது நீண்ட நாள் பள்ளி தோழியைத் தான் ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் புரிகின்றனர்:
திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி அறிவித்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் குழந்தை விஷயத்திலும், தொழில் ரீதியான நட்பு இவர்களுக்குள் தொடர்ந்தது. ஜிவி பிரகாஷ் இசை கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடல் பாடினார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இருவரும் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளனர் (Sainthavi divorce case).
மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து:
சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முன்பு ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். அதோடு இருவரும் மனமுவந்து பிரிவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர் இருவரும் ஒன்றாக ஒரே காரில் புறப்பட்டுச் சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பிரிந்து வாழ்ந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும்:
உடனே விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மாதங்களாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருவரும் தனித்தனியாக குறிப்பிட்ட மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தால் அதை வைத்து விவாகரத்து கோருவது என்பது எளிது என்பது குறிப்பிடத்தக்கது.