- Home
- Gallery
- மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்
மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்
சினிமா வட்டாரத்தில் தற்போது விவாகரத்துகள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் பிரிந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி மீண்டும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

GV Prakash Saindhavi Rejoin
எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் சார் திரைப்படம் உருவாகி வருகிறது.
Vimal
மா.பொ.சி என்று ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிறகு எதிர்ப்பு கிளம்பு ‘சார்’ என்ற என்ற புதிய தலைப்பினை வைத்தனர். சமீபத்தில் சார் படத்தின் டீசர் வெளியானது.
Sir Movie
அதில் சாமி பெயரை கூறி கல்விக்கு தடை போடும் கிராமத்தை பற்றியும், அங்குள்ள மாணவர்கள் படிப்புக்காக போராடும் ஒரு ஆசிரியர் பற்றியுமான கதை தெரிய வருகிறது.
Bose Venkat
விரைவில் வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது சமீபத்தில் பிரிந்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் - பாடகி சைந்தவி பற்றி தான். சார் படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
Vetri Maran
விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் பாடதிக்ரு சித்து இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்பதில் இடம்பெற்றுள்ள பனங்கருக்கா என்ற பாடல் வெளியாகவுள்ளது. இதனை எழுத்தாளர் விவேகா எழுதியுள்ளார்.
GV Prakash
இப்பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் பிரிவினை அறிவித்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி எப்படி பாடியிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Saindhavi
எனினும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவதற்கு முன்பே இப்பாடல் பதிவு நடைபெற்று இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார் என்பது முக்கியமான விஷயமாகும்.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?