தூங்கும் முன் 'இதை' குடித்தால் போதும்.. எடை தன்னால குறையும்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை குடியுங்கள். விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை குடியுங்கள். விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.
Bedtime Drinks to Burn Fat and Lose Weight : தற்போது அதிக எடையால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் எடையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் தவிர்த்து வருகின்றனர். இதற்காக பலர் உணவு கட்டுப்பாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்றோ அல்லது உடற்பயிற்சி செய்யவோ நேரம் இல்லை என்று நீங்கள் புலம்புகிறீர்களா கவலை வேண்டாம் உங்களுக்காக தான் இந்த பதிவு.
உடல் எடையை குறைக்க இரவு தூங்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சிறப்பு பானங்களில் ஒன்றை மட்டும் குடித்தால் போதும். விரைவாக எடை குறையும். அது என்னென்ன பானங்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: எடை குறைய டீ!! தினமும் இரண்டு வேளை குடிச்சு பாருங்க!
இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பிறகு அதை வடிகட்டி நன்கு ஆறியதும் இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் விரைவில் குறையும். இந்த பானம் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் எடை குறையனுமா? நீங்க பின்பற்ற வேண்டிய டயட் ப்ளான் இதோ!!
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி ஆரியபிறகு குடிக்க வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து இரவு தூங்கும் முன் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.
இரவில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் குடிப்பது ரொம்பவே நல்லது. இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு ஆறியதும் குடிக்க வேண்டும். இந்த சீரக தண்ணீரை நீங்கள் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் எடை சீக்கிரமாகவே குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
பொதுவாக பலர் கற்றாழை சாறை பகலில் தான் குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இரவில் கூட இதை குடிக்கலாம். இந்த பானம் எடையை குறைக்க பெரிதும் உதவும்.