காலை எழுந்ததும் ஏன் பல் துலக்கக்கூடாது? ஆயுர்வேதம் சொல்லும் இந்த '1' விஷயத்தை படிங்க!!
காலையில் எழுந்ததும் பல் துலக்க கூடாது என சொல்ல என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் பல் துலக்க கூடாது என சொல்ல என்ன காரணம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Why Brushing Your Teeth First in the Morning Matters : காலை எழுந்தவுடன் பேஸ்ட்,ப்ரஷை தான் நம்மில் பலர் தேடுவோம். பல் துலக்கினால் தான் அது விடியல். வாய் துர்நாற்றம் நீங்கு புத்துணர்ச்சியாக இருக்கும்போது தான் தயங்காமல் பேச முடியும். அன்றைய நாளையே தொடங்க முடியும். அந்தளவுக்கு வாய் சுகாதாரம் அவசியமான ஒன்றாகும். ஆனால் காலை எழுந்ததும் பல் துலக்குவதையே கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். ஏனென்றால் ஆயுர்வேத நிபுணர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கக் கூடாது என சொல்கின்றனர் தெரியுமா? ஆம் அதற்கு 2 காரணங்கள் உள்ளன.
ஆயுர்வேதம் காலையை எவ்வாறு தொடங்க வேண்டும் என நமக்கு சொல்கிறது. அதன்படி, தினமும் காலை எழுந்ததும் முதலில் பல் துலக்கக்கூடாதாம். ஏனென்றால் காலை எழுந்ததும் உடலுக்கு தேவை தண்ணீர் தான். நீங்கள் எழுந்ததுமே செம்பு நிறைய தண்ணீர் குடிக்கலாம். தூங்கும்போது படுக்கைக்கு பக்கத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை வைத்து கொண்டால் எழுந்ததும் தண்ணீர் குடித்துவிடலாம். இப்படி தண்ணீர் குடிக்கும் முன்பு பல் துலக்க வேண்டாம் என ஆயுர்வேதம் சொல்கிறது.
காலை எழுந்து முதலில் தண்ணீர் குடிக்கும் முன்பாக ஏன் பல் துலக்கக்கூடாது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. இரவில் படுக்கைக்கு சென்ற பின் வயிற்றில் செரிமான நெருப்பைத் தூண்டப்படுகிறது. இதனால் செரிமான அமைப்பு நன்கு வேலை செய்திருக்கும். காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்கும்போது மீண்டும் செரிமான மண்டலம் மீண்டும் சுறுசுறுப்பாகும்.
இதையும் படிங்க: இரவில் பல் துலக்கவில்லை எனில் மாரடைப்பு ஏற்படுமாம்.. புதிய ஆய்வில் எச்சரிக்கை..
இரண்டாவது காரணம் என்னவெனில், இரவு நாம் தூங்கிய பின் வாய்க்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் குவியும். வாயிலிருந்து வரும் துர்நாற்றத்திற்கு இதுவே காரணமாகும். ஆனாலும் இந்த பாக்டீரியாக்கள் அவசியமானவையும் கூட. நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இவை சிக்னல்களை அனுப்பும். இந்த பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் போகும்போது மூளைக்கும் ,நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் உடலுக்கு என்ன தேவை என்பது குறித்த தகவல்களை வழங்குகின்றன என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
இதையும் படிங்க: எத்தனை நிமிடங்கள் பல் துலக்க வேண்டும்? சரியான முறை எது?
அது எப்படி பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது என கேள்வி எழுகிறதா? ஆனால் அப்படி செய்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கு சளி இருக்கிறது என வைத்துகொள்வோம். அப்போது வாயில் இருக்கும் சளியை உண்டாக்கும் வைரஸ் அறிகுறிகள் இருக்கும். இது உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை சென்றடையும். இதையடுத்து உடல் அதை எதிர்த்துப் போராடத் தொடங்கும். அதனால் எப்போதுமே காலை எழுந்ததும் பல் துலக்கும் முன் ஒரு செம்பு தண்ணீர் குடித்துவிடுங்கள். பின்னர் பல் துலக்கலாம்.