Benefits Of Barefoot Walking : வெறுங்காலுடன் வீட்டிற்குள் நடப்பது பல்வேறு நன்மைகளை தரக் கூடியது என பலருக்கும் தெரியாது. இது எளிய பயிற்சியாகும். காலையில் வெறுங்காலில் வீட்டு அருகே உள்ள புல்வெளியில், பார்க் போன்ற இடங்களிலும் வெறுங்காலில் நடக்கலாம். ஆனால் கரடுமுரடான இடங்களில் மட்டும் வெறுங்காலில் நடக்கும்போது கவனம் தேவை. வயதானவர்கள், நிரீழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் காயங்களை ஏற்படுத்தாத சமபரப்புகளில் மட்டுமே வெறுங்காலில் நடக்க வேண்டும். இதனால் பாதங்களுக்குள் உள்ளார்ந்த தசை வலிமை கிடைக்கும். கால்களில் காணப்படும் தசைகள் வலுப்படுகின்றன.
24
கால் தசைகளின் இயக்கம்;
கால்களில் இருக்கும் தசைகள் ஒட்டுமொத்த உடல் இயக்கத்துடன் தொடர்புடையது. வெறுங்காலில் நடப்பதால் தசைகள் நன்றாக இயங்கும். இது கால்களை வலுப்படுத்துவதோடு கால்களில் உள்ள சருமத்தை சுவாசிக்கவும் அனுமதிக்கும். இதனால் உள்ளங்கால்களில் ஈரப்பதம் அதிகரிப்பது குறைகிறது.
- வெறுங்காலில் சில நிமிடங்கள் நடந்தாலும் சில பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுக்கும். இப்படி நடப்பது நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிற வழியாகும். இயற்கையோடு நேரடி தொடர்பு கொள்வதால் மன நிலை மேம்படும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
- உடலுக்கு சமநிலை அதிகரிக்கிறது. வயதான காலங்கள் ஏற்படும் தடுமாற்றத்தை குறைக்க வெறுங்காலில் நடப்பது உதவுகிறது.
- வெறுங்காலில் நடக்கும்போது தரைக்கும் உடலுக்கும் இடையே இணைப்பு கிடைக்கிறது. கால் தசைகள் வலுவடைகின்றன.
- வெறும் காலில் கொஞ்ச நேரம் நடந்தாலும் உடல் இயக்கம் மேம்படும். இரத்த ஓட்டம் சீராக இந்த நடைபயிற்சி உதவுகிறது. கொஞ்சம் கரடு முரடான தரையில் வெறுங்காலில் நடந்தால் பாதத்தில் நேரடி அழுத்தம் கிடைக்கும். இது உடற்செயல்பாட்டை மேம்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.