MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வாக்கிங் தான் உங்க உடற்பயிற்சியா? அப்ப இந்த '4' விஷயங்களை கண்டிப்பா கவனிங்க!! 

வாக்கிங் தான் உங்க உடற்பயிற்சியா? அப்ப இந்த '4' விஷயங்களை கண்டிப்பா கவனிங்க!! 

நீங்கள் நடைபயிற்சியை மட்டுமே உடற்பயிற்சியாக செய்பவராக இருந்தால் சில விஷயங்களை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 24 2025, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

How To Fix Walking Mistakes : நமது உடல் இயக்கத்தின் முக்கியமான செயல் வடிவமே நடைபயிற்சியாகும். இதை சிலர் தங்கள் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சிக்கு சமமான ஒன்றாக செய்து வருகிறார்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக தினமும் நடைபயிற்சி செய்கின்றனர். வெகுநாட்கள் நடைபயிற்சி செய்தபோதிலும் குறிப்பிட்ட எடை குறைப்போ அல்லது நன்மைகளோ கிடைக்கவில்லை என புலம்புவோரும் உண்டு.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

நீங்கள் தவறான தோரணையில் நடப்பது தான் அதற்கு காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் நடைபயிற்சி செய்யும்போது செய்யும் சில தவறுகள் தான் நாம் முழு பலன்களை பெறுவதில் இருந்து நம்மை தடுக்கிறது. இதனால் சில ஆரோக்கியப் பின்னடைவுகளும் ஏற்படலாம். இந்த பதிவில் நடைபயிற்சியை அன்றாட வாழ்வின் உடற்பயிற்சியாக செய்து வருபவர்கள் செய்யக்கூடாத தவறுகள் குறித்து காணலாம். 

36
நடைபயிற்சியின் தவறுகள்;

நடைபயிற்சியின் தவறுகள்;

தோரணையில் கவனம் செலுத்தாமல் சரியற்ற  நடைபயிற்சி வடிவம் கொண்டிருப்பதால் முதுகுவலி, மூட்டு வலி,   போன்றவை ஏற்படும். நீண்ட நேரம் நடந்த பின்னர் கீழ் முதுகில் ஒருவிதமான இழுவை உணர்வு இருந்ததா? இப்படி வந்தால் இடுப்பு நெகிழ்வு தசைகள் அதிகம் பயன்படுவதாக அர்த்தம். இந்த தசைகள் இயல்பிலேயே இறுக்கமானவை. இவற்றை நடக்கும்போது அதிகம் இயக்கத்திற்கு உட்படுத்தக் கூடாது. மேல் முதுகு முதல்  கன்று தசைகள் (calf muscles) வரை நன்கு இயங்க வேண்டும். பலர் நடக்கும்போது இடுப்பு தசைகளை ஈடுபடுத்திவிட்டு உடலின் மையப்பகுதி, வயிற்றுப்பகுதியின் இயக்கத்தை மறந்துவிடுகிறோம். இதனால் கீழ் உடலில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுத்துகிறது. உடலில் தசைகளை முழுமையாக ஈடுபடுத்துவதால் தோரணை மேம்படும். உடலில் , விறைப்பைத் தடுத்து எளிதாக நடக்கலாம். 

46
நடக்கும்போது கனமாக உணர்வது ஏன்?

நடக்கும்போது கனமாக உணர்வது ஏன்?

நடக்கும்போது கால்களை தட்டையாக வைக்குறீங்களா? கால்களை நகர்த்தும்போது   தட்டையாக தரையில் கால்களை வைக்கக் கூடாது. இதனால் ஒவ்வொரு காலடியிலும் மூட்டுகள், அதிலும் முழங்கால்கள் மூலம் ஜார்ரிங் சக்தியை அனுப்பப்படுகிறது. இது தவறு. வலி ஏற்படும். தொடை எலும்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும்.  மாறாக குதிகால் தொடங்கி  கால் வரை சம சக்தியுடன் நடப்பது நல்லது. 

இதையும் படிங்க:  காலைல வாக்கிங்கா? இந்த நேரத்துல போறதே பெஸ்ட்!! அற்புதமான '7' நன்மைகள்!! 

56
தலையின் நிலை:

தலையின் நிலை:

நடக்கும் போது தரையை பார்த்தபடி நடப்பது, செல்போன் பார்த்தபடி நடப்பது போன்றவை மோசமான பழக்கமாகும்.  இதனால் உங்களுடைய தோரணை பாதிக்கப்படுகிறது. மேல்முதுகில் அதிகமான அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படக்கூடும். நீங்கள் நடக்கும்போது உங்களுடைய முதுகு நிமிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். தோள்கள் தளர்ந்து முன்னோக்கி நகர்வதற்கு ஏற்றவாறு நேராக பார்த்தபடி நடக்க வேண்டும். 

இதையும் படிங்க:  வெறும் 30 நிமிட வாக்கிங்!! வெளிப்படையாக தெரியாத 6 நன்மைகள்!! 

66
கைகள் அசைதல்;

கைகள் அசைதல்;

நீங்கள் ஓடும் போது கைகளை அசைக்காமல் உங்கள ஓட முடியாது அல்லவா?  அதைப்போல நடை பயிற்சி செய்யும் போதும் நிச்சயமாக கைகளை முன்னும் பின்னும் நகர்த்த வேண்டும். உங்களுடைய முழு உடலும் இயக்கத்தில் இருக்க கைகளை அசைப்பது அவசியமாகிறது கைகள் அசையும் போது உங்களுடைய வயிற்று தசைகள் ஈடுபடுகின்றன இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி தவறுகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved