Velmurugan s | Published: Mar 25, 2025, 5:00 PM IST
ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட( MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேரமில்லா நேரத்தில் விவாதிப்பதற்காக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று (25.03.2025) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.