Velmurugan s | Published: Mar 25, 2025, 8:00 PM IST
சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து SFI அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர் . மாணவிகள் இரண்டு பேர் மீது அரசு மகளிர் பாலிடெக்னிக் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் .அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் மாணவிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்கள் பகிரப்பட்ட நிலையில் ....இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இது தவறான தகவல் எனவும் ..சிறுமி ஒருவர் விடுதியை விட்டு வெளியே சென்றிருந்த போது ..அவர் காதலனுடன் சென்றதாகவும் இது குறித்து அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்ததாகவும் ..பிறகு மனைவியை எச்சரிக்கை செய்து ஒரு வார விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதை அடுத்து மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் TC வழங்கியுள்ளது ..இந்நிலையில் காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் கூட்டு பாலியலை மறைக்க முயல்கின்றனர் என்று போராட்டத்தில் எட்டுப்பட்டுள்ளனர் .