Published : Sep 09, 2023, 06:54 AM ISTUpdated : Sep 10, 2023, 03:32 PM IST

G20 Summit 2023 Delhi Live: ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு!

சுருக்கம்

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ஜி20 தலைமை பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.

G20 Summit 2023 Delhi Live: ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு!

03:32 PM (IST) Sep 10

ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

ஜி20 மாநாட்டு மண்டபத்தில் மழைநீர் தேங்கிய விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

02:58 PM (IST) Sep 10

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

02:37 PM (IST) Sep 10

இந்தியா என்ற பேரை கேட்டாலே அதிருதா.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்

அண்ணாமலை தான் செய்யும் விவசாயத்தை மற்றவர் செய்ய முடியாது என்கிறார். இதன் மூலம் தனது உள்ள கிடப்பை வெளி கொண்டு வந்திருக்கிறார். ஜாதிய கோட்பாட்டை அண்ணாமலை  வழி மொழிந்திருக்கிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

02:24 PM (IST) Sep 10

ரூ.1 லட்சம் கிடைக்கும் எல்ஐசியின் நியூ ஜீவன் சாந்தி பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா.?

எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிசி ஆனது உங்களின் ஓய்வு காலத்தை உறுதியான வருடாந்திர ஓய்வூதியத்துடன் ரூ 1 லட்சம் வரை பாதுகாக்கும். இத்தகைய ஜீவன் சாந்தி பாலிசி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

02:02 PM (IST) Sep 10

ஜி20 மாநாடு நிறைவு

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு நிறைவு பெற்றது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது

01:37 PM (IST) Sep 10

நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி

பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நடிகர் ஜிபி முத்து, புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

01:33 PM (IST) Sep 10

G20 Summit 2023: ஜி 20 உச்சி மாநாடு.. இந்தியாவின் இசை பாரம்பரியத்தை ரசித்து பார்த்த விருந்தினர்கள்..!!

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 விருந்தில் இந்தியா தனது இசை பாரம்பரியத்தின் ஒரு காட்சியை உலகுக்கு காட்டியது.

12:52 PM (IST) Sep 10

MINI Cooper EV : கார் பிரியரா நீங்கள்.? மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் வரப்போகுது.. எவ்வளவு விலை தெரியுமா.?

புதிய மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார்களின் உலகளாவிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை பற்றி பார்க்கலாம்.

12:43 PM (IST) Sep 10

அடுத்த ஆதி குணசேகரனா நடிக்க கேட்டது நிஜம் தான்... ஆனா! எதிர்நீச்சல் டீமுக்கு வேல ராமமூர்த்தி கொடுத்த டுவிஸ்ட்

மாரிமுத்து மறைவை அடுத்து ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என நடிகர் வேல ராமமூர்த்தி கூறி உள்ளார்.

12:19 PM (IST) Sep 10

சந்திரபாபு நாயுடு கைது: எல்லையில் தொடரும் பதற்றம்.. தமிழக பேருந்துகள் நிறுத்தம் !!

வேலூரிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதால் இயக்கபடவில்லை.

12:08 PM (IST) Sep 10

பாரா ஒலிம்பிக் போட்டியில் மாபெரும் சாதனை படைத்த முதல் இந்தியர் மார்க் தர்மாய்.. எந்த சாதனை தெரியுமா?

பாரா ஒலிம்பிக் தடகள வீரர் மார்க் தர்மாய் உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

11:52 AM (IST) Sep 10

அரசு ஓய்வூதியம் பெறுபவர்களே அலெர்ட்.. டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ !!

அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள், 30 நவம்பர் 2023க்குள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்க்கைச் சான்றிதழை 7 வெவ்வேறு வழிகளில் சமர்ப்பிக்கலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.

11:30 AM (IST) Sep 10

ஜி20 டெல்லி பிரகடனம்: 200 மணி நேர பேச்சுவார்த்தை - ஷெர்பா தகவல்!

ஜி20 டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்

11:29 AM (IST) Sep 10

வியட்நாம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியட்நாம் புறப்பட்டார்.

11:18 AM (IST) Sep 10

முறைகேட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர் - அதிரடி உத்தரவு

குன்னூர் திமுகவை சேர்ந்த எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், செக்கில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

11:04 AM (IST) Sep 10

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

புது டெல்லி ஜி20 உச்சி மாநாடு 2023 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பிறகு, 7வது சம்பள கமிஷன் தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் தரப்பில் அதிகமாக உள்ளது.

10:59 AM (IST) Sep 10

பர்த்டே ஸ்பெஷல்... வாரிசு நடிகராக இருந்தும் தனி ஒருவனாக சம்பாதித்த ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

10:20 AM (IST) Sep 10

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை!

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்

10:19 AM (IST) Sep 10

டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்

09:57 AM (IST) Sep 10

இந்தியாவின் மிகவும் விலை குறைந்த கார்கள்.. விலை இவ்வளவு தானா.? முழு விபரம் இதோ !!

இந்தியாவின் சக்திவாய்ந்த அம்சங்களுடன் கூடிய 5 மலிவான கார்கள் மிக விரைவில் வரவுள்ளது. சிறந்த 5 கார்களை பற்றி பார்க்கலாம்.

09:42 AM (IST) Sep 10

இது வீடா இல்ல அரண்மனையா! தியேட்டர் வசதியுடன் விஜயகுமார் மகள் கட்டிய சொகுசு பங்களாவின் ஹோம் டூர் வீடியோ இதோ

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் சென்னையில் புதிதாக கட்டியுள்ள பிரம்மாண்ட பங்களாவின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது.

09:24 AM (IST) Sep 10

அன்லிமிடெட் 5ஜி டேட்டா.. Jio மற்றும் Airtel வாடிக்கையாளர்களுக்கு அடிச்சது ஜாக்பாட் - முழு விபரம் இதோ !!

ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இன்டர்நெட் பேக் பற்றி பார்க்கலாம். அதுவும் அன்லிமிடெட்  5ஜி டேட்டா பெறுவது எப்படி என்றும் தெரிந்து கொள்ளலாம்.

09:06 AM (IST) Sep 10

ராஜ்காட்டில் உலக நாடுகளின் தலைவர்கள்.. கதர் சால்வை அணிவித்து வரவேற்ற பிரதமர் மோடி

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நினைவிடம் வரும் உலக தலைவர்களுக்கு கதர் சால்வை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார். 

09:02 AM (IST) Sep 10

காப்பி சர்ச்சைக்கு மத்தியில் கல்லா கட்டும் ஜவான்... பிகில் பட லைஃப் டைம் வசூலை 3 நாளில் முறியடித்து சாதனை

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பிகில் படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் குவித்து சாதனை படைத்துள்ளது.

08:22 AM (IST) Sep 10

உயில் இல்லாமல் சொத்தை மாற்றுவது எப்படி? சொத்து பரிமாற்ற விதிகளில் மாற்றம் - முழு விபரம் இதோ !!

சொத்து பரிமாற்ற விதிகளில் தற்போது பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. ஒருவர் இறந்த பிறகு உயில் இல்லாமல் சொத்தை மாற்றுவதற்கான புதிய விதிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

07:52 AM (IST) Sep 10

ஜி20 செயற்கைக்கோள்.. உலக நாடுகளுக்கு வானிலை தகவல்கள்.. பிரதமர் மோடி கொடுத்த சூப்பர் அப்டேட் !!

காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை பற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

09:31 PM (IST) Sep 09

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஜி20-யின் மெகா திட்டம்!

ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் (India-Middle East-Europe connectivity corridor) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சனிக்கிழமை கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த வர்த்தக வழித்தடம் பற்றிப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது உண்மையிலேயே பெரிய விஷயம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

09:27 PM (IST) Sep 09

ஜி20 உச்சி மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த தீர்மானம்!

இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஒரு பெரிய சாதனையாக, டெல்லி பிரகடனம் என்று அழைக்கப்படும் மாநாட்டு கூட்டறிக்கையில் உக்ரைன் போர் குறித்த தீர்மானத்திற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

09:25 PM (IST) Sep 09

மொரோக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1037 ஆக உயர்வு!

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 1037 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,200 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது.

03:06 PM (IST) Sep 09

நிலவில் விக்ரம் லேண்டரை படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!!

சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டரை கடந்த செப்டம்பர் 6, 2023 அன்று சந்திரயான்-2 ஆர்பிட்டரின் இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி படம்பிடித்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இரவு நேரம் என்பதால், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் உறக்க நிலையில் உள்ளன.

03:03 PM (IST) Sep 09

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி ஏன் ஜோ பைடனுக்கு கோனார்க் சக்கரத்தை காட்டினார்? அதன் முக்கியத்துவம் என்ன?

ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் கலந்து கொள்ள டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார்

02:06 PM (IST) Sep 09

புதிதாக திருமணம் ஆன ஜோடியா நீங்கள்.. தம்பதிகளுக்கான சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் இதுதான் !!

அஞ்சலக சேமிப்புத் திட்டம் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது. தபால் அலுவலகம் அனைத்து வயது மற்றும் பிரிவினருக்கு சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. தம்பதிகளுக்கான சிறந்த தபால் அலுவலக திட்டம் பற்றி பார்க்கலாம்.

02:05 PM (IST) Sep 09

G20 உச்சி மாநாட்டின் சிறப்பு மெனு.. இந்தியாவின் சமையல் பாரம்பரியத்தை பிதிபலிக்கும் தினை உணவுகள்..

உலக தலைவர்களுக்கு இந்தியா தனது சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் G20 மெனுவில் தினை ஹீரோவாக உள்ளது.

01:37 PM (IST) Sep 09

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தடைந்தார்

ஜி20 மாநாடு நடைபெறுவதை அடுத்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் டிஆர்.பாலு வரவேற்பு அளித்தார். 

01:31 PM (IST) Sep 09

வருமானவரித்துறை நோட்டீஸ்.. 22 ஆயிரம் பேரின் பட்டியல்.. உங்கள் பெயரும் இருக்கா.? முழு விபரம் இதோ !!

22 ஆயிரம் வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை தகவல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோரப்பட்ட தொகை சரியாகக் கண்டறியப்படாததால், இவர்கள் நிரப்பிய ITR பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது.

12:53 PM (IST) Sep 09

G20 India | G20 மாநாடு அருகே சாம்பல் நிற லங்கூர் குரங்கு கட்டவுட்கள்! குரங்குளை விரட்டும் டெல்லி!

G20 India | G20 மாநாடு அருகே சாம்பல் நிற லங்கூர் குரங்கு கட்டவுட்கள்! குரங்குளை விரட்டும் டெல்லி!.

 

12:44 PM (IST) Sep 09

G20 மாநாட்டுக்கு வந்திருந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்!!

G20 மாநாட்டிற்கு வந்திருந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

12:23 PM (IST) Sep 09

ஜி20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்கா யூனியன்.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற உறுப்பு நாடுகள் - ஏன்? எதற்கு?

ஜி20 அமைப்பில் தற்போது ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை பிற உறுப்பு நாடுகள் ஏற்றுள்ளது.

12:22 PM (IST) Sep 09

ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் சிறப்பு ஜி20 விருந்து.. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடுக்கும் சிறப்பு விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

12:18 PM (IST) Sep 09

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்றார் பிரதமர் மோடி!!

G20 மாநாட்டிற்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றார்.