ஜி20 அமைப்பில் இணைந்த ஆப்பிரிக்கா யூனியன்.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற உறுப்பு நாடுகள் - ஏன்? எதற்கு?
ஜி20 அமைப்பில் தற்போது ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை பிற உறுப்பு நாடுகள் ஏற்றுள்ளது.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஜி20 மாநாட்டில் நமது நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாநாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்று அரங்குக்கு அழைத்துச் சென்றார்.
ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்
தொடர்ந்து மாநாட்டில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது. ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி-20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.
முன்னதாக ஜி-20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது கவனம் பெற்றது. மாநாடு தொடங்கியவுடன் மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி